News October 30, 2025

பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் காலமானார்

image

பிரபல ஹாலிவுட் நடிகர் ஃபிலாய்ட் ரோஜர் மையர்ஸ் ஜூனியர்(42) காலமானார். வில் ஸ்மித் நடிப்பில் 1990-ல் வெளிவந்த ‘The Fresh Prince of Bel-Air’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தனது நகைச்சுவையால் ரசிகர்களின் மனங்களை வென்ற இவர், மாரடைப்பால் உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்மை காலமாக நடிகர்கள் பலரும் மாரடைப்பால் மறைந்து வருகின்றனர்.

Similar News

News October 31, 2025

கார்த்திகாவுக்கு பைசன் படக்குழு அளித்த வெகுமதி

image

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், இயக்குநர் மாரி செல்வராஜ், கார்த்திகாவை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். அப்போது, கார்த்திகாவுக்கு ₹5 லட்சத்தையும், கண்ணகி நகர் கபடி குழுவுக்கு ₹5 லட்சம் என மொத்தம் ₹10 லட்சத்தை ‘பைசன்’ படக்குழு சார்பாக மாரி அளித்தார்.

News October 31, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News October 31, 2025

பிஹார் மக்களை திமுக துன்புறுத்துகிறது: PM மோடி

image

தமிழகத்தில் பிஹார் மக்களை திமுக துன்புறுத்துவதாக PM மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹார் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், கர்நாடகா, தெலுங்கான ஆகிய காங்., ஆளும் மாநிலங்களிலும் பிஹார் மக்கள் அச்சுறுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக, ஒடிசா சட்டமன்ற தேர்தலின் போது, புரி ஜெகநாதர் கோயிலின் சாவி தமிழகத்திற்கு சென்றுவிட்டதாக மோடி குற்றஞ்சாட்டியிருந்தார்.

error: Content is protected !!