News October 1, 2025

போதைப்பொருளுடன் சென்னையில் நடிகர் கைது

image

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ₹40 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்ததாக சென்னை விமான நிலையத்தில் பாலிவுட் துணை நடிகர் விஷால் பிரம்மா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Student of the Year உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக விஷால் நடித்திருக்கிறார்.

Similar News

News October 2, 2025

‘பைசன்’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் இதோ..

image

‘பைசன்: காளமாடன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை நடிகர் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பள்ளி சீருடையில், செம்மண் மேட்டில், சக இளவட்டங்களுடன் துருவ் இருக்கும் அப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் மழை பொழிந்து வருகின்றனர். அதேபோல், அப்படத்தின் அடுத்த பாடலான ‘தென்நாடு’ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 2, 2025

ராசி பலன்கள் (02.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News October 2, 2025

தமிழகத்திற்கு ₹4,144 கோடி நிதி விடுவிப்பு

image

மாநில அரசுகளுக்கான ₹1,01,603 கோடி வரிப்பகிர்வு நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுப்படுத்த தமிழக அரசுக்கு ₹4,144 கோடி விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு ₹18,277 கோடி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக அக்.10-ம் தேதி நிதி விடுவிக்கப்படும் நிலையில், இம்முறை 10 நாள்களுக்கு முன்பே விடுவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!