News April 21, 2025
மத புரட்சி செய்த போப் பிரான்சிஸ்!

கடவுளின் இருப்பு குறித்து சந்தேகப்படுவது பாவச் செயல் அல்ல, அதுதான் மனித குலத்திற்கான வளர்ச்சி என்று எந்த மத தலைவரும் சொல்லாததை சொன்னவர் போப் பிரான்சிஸ். கத்தோலிக்க மதத்தை முற்போக்கு பாதைக்கு மாற்ற தன்னால் இயன்றதை செய்தவர். காலநிலை மாற்றம், காசா வன்முறை குறித்து பெருங்கவலை கொண்டவர். Global South என அழைக்கப்படும் வளர்ந்துவரக்கூடிய நாடுகளில் இருந்து வந்த முதல் போப்பும் பிரான்சிஸ்தான்.
Similar News
News September 11, 2025
செங்கோட்டையனை பாஜக இயக்குகிறது: திருமா

அமித்ஷாவை சந்தித்ததன் மூலம் செங்கோட்டையனின் பின்னால் பாஜக இருப்பது உறுதியாகியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தனியே போகவிடாமல், கூட்டணிக்குள்ளும் தனித்து செயல்படவிடாமல் அதிமுகவை கபளிகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், EPS நீக்கிய ஒருவரை அமித்ஷா, நிர்மலா சீதாராமன் எந்த துணிச்சலில் சந்திக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News September 11, 2025
மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா

இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து டாஸில் தோல்வியடைந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக டாஸை தோற்ற இந்திய அணி, அதன்பின் தொடர்ச்சியாக 15 முறை டாஸை ஜெயிக்கவே இல்லை. இந்த மோசமான சாதனைக்கு UAE-க்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
News September 11, 2025
இதை மட்டும் Avoid பண்ணாதீங்க

பிசியாக இருந்தால் அல்லது அடிக்கடி டாய்லெட் செல்ல வேண்டுமே என்ற அலுப்பு காரணமாக, நம்மில் பலரும் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும், அதை புறக்கணித்து இருந்து விடுகிறோம். அடிக்கடி இப்படி செய்வதால், சிறுநீர் அழுத்தம் அதிகரிக்கும். இது சிறுநீரக பாதிப்பு, ஸ்டோன், கட்டுப்பாட்டை மீறி சிறுநீர் கழித்தல் போன்றவற்றுக்கு காரணமாகலாம். ஆகவே, இயற்கை உபாதைக்கு உடல் அழைக்கும் போது, உடனடியாக செவி கொடுங்கள்.