News February 23, 2025
போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்

போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14ஆம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் நேற்று முன்தினம் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Similar News
News February 23, 2025
விதவைகளுக்கு இலவச மின் இணைப்பு: அரசு

விதவைகள், EX ராணுவ வீரர்களுக்கு இலவச வேளாண் மின்சார இணைப்பு நிச்சயம் வழங்க வேண்டும், மறுக்கக் கூடாது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) தெளிவுபடுத்தியுள்ளது. சிறப்பு பிரிவின்கீழ் மின் இணைப்பு கேட்டு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அதற்கு TNPDCL மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து அவரும், மேலும் சிலரும் புகார் அளித்தனர். இதையடுத்து TNERC ஆணையிட்டுள்ளது.
News February 23, 2025
அன்று CEOக்கு.. இன்று அரசு ஊழியர்களுக்கு..

USA அரசு ஊழியர்கள் கடந்த ஒரு வாரமாக என்ன வேலை செய்தனர் என்பதை நிரூபிக்கத் தவறினால், வேலை பறிபோகும் என DOGE தலைவர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுவித்துள்ளார். இது குறித்து X பயனர் ஒருவர், 3 ஆண்டுகளுக்கு முன்பு X CEO பராக் அகர்வாலிடம் கேட்டதையே, தற்போது அரசு ஊழியரிடம் மஸ்க் கேட்பதாக பதிவிட்டார். இதற்கு கமெண்ட் செய்துள்ள மஸ்க், அகர்வால் எந்த வேலையும் செய்யாததால் நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
News February 23, 2025
மெஹந்தியை தலைக்கு இப்படி யூஸ் பண்ணுங்க..!

*நரை முடியை மறைக்க, மெஹந்தி கிரீன் டீயில் ஊற வைத்து, தயிர், முட்டை சேர்த்து முடியில் தடவவும். 2-3 மணி நேரம் கழித்து கழுவவும் * மெஹந்தியை ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். இதனால், மெஹந்தி, வெந்தய தூள், பிராமி பவுடரை சேர்த்து முடியில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும் * மெஹந்தியுடன் தயிர் கொஞ்சம் தேன் சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் போட்டு கழுவினால், இது ஒரு இயற்கை ஹேர் கண்டிஷனர்.