News April 22, 2025
பாப் உலக ஜாம்பவான் ஹஜ்ஜி அலெஜாண்ட்ரோ காலமானார்!

பிரபல நடிகரும், பாடகருமான பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹஜ்ஜி அலெஜாண்ட்ரோ காலமானார். பாப் உலகின் ஜாம்பவானாக இருந்த இவர், சில காலமாகவே பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். 70, 80களில் தனது கலைப்பயணத்தை தொடங்கி, ‘Kay Ganda ng Ating Musika’, ‘Nakapagtataka’ போன்ற உலகளவில் ஹிட்டடித்த ஆல்பங்களில் பாடியுள்ளார். Kumusta ka, Hudas, Stepanio போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார். #RIP
Similar News
News November 28, 2025
விஜய் தனித்துவமாக இயங்க வேண்டும்: திருமாவளவன்

பாஜகவுடன் விஜய் இணக்கமாக செல்வது, அவரது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று திருமாவளவன் கூறியுள்ளார். விஜய் தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகியதற்கு பின்னால் BJP, RSS உள்ளதோ என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும், அதிமுகவை பலவீனப்படுத்தும் செயலில் பாஜக இறங்கியிருப்பதாகவும் திருமா கூறியிருந்தார்.
News November 28, 2025
தேர்வு இல்லாமல் மத்திய அரசில் 156 வேலைவாய்ப்பு!

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் ஃபிட்டர், உள்ளிட்ட 156 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ITI. மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோருக்கு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.8. இங்கே <
News November 28, 2025
லோகேஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜுனா?

லோகேஷிடம் கதை கேட்ட அல்லு அர்ஜூன், அக்கதை பிடித்துப்போக ஸ்கிரிப்ட் வேலைகளை உடனே தொடங்க சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு, தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். அதேநேரம், ‘கூலி’ பட தோல்விக்கு பிறகு ‘DC’ படத்தில் நடித்து வரும் லோகேஷ், ‘கைதி 2’ படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் – அல்லு அர்ஜுன் காம்போ எப்படி இருக்கும்?


