News October 26, 2024
கேப்டன் ரோஹித்தின் மோசமான சாதனை

கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஒரு மோசமான சாதனை படைத்துள்ளார். சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளை சந்தித்த இந்திய கேப்டன் என்ற சாதனைதான் அது. நியூசி., க்கு எதிரான இன்றைய போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் கேப்டனாக ரோஹித் சொந்த மண்ணில் 4 தோல்விகளை சந்தித்துள்ளார். கங்குலி (3), தோனி (3), சச்சின் (2), டிராவிட் (2), கோலி (2), கும்ப்ளே (1) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Similar News
News January 14, 2026
₹1,000 உரிமைத் தொகை உயர்வு.. மகிழ்ச்சியான செய்தி

₹1,000 மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அமைச்சரும் விரைவில் இனிப்பான செய்தி வரும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகையை 50% உயர்த்தி ₹1,500 ஆக வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பையும் CM ஸ்டாலின் பொங்கல் தினமான நாளை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
News January 14, 2026
இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்ப வேண்டிய பொங்கல் வாழ்த்துகள் இதோ..
*அன்பும் ஆனந்தமும் பொங்கிட, அறமும் வளமும் தழைத்திட, இல்லமும் உள்ளமும் பொங்க.. தைப் பொங்கல் நல்வாழ்த்துகள் *மங்களகரமான பொங்கல் திருநாள் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் *கரும்பின் சுவை போல உங்கள் வாழ்க்கை என்றென்றும் தித்திக்கட்டும்… இனிய பொங்கல் வாழ்த்துகள்
News January 14, 2026
‘ஆசிரியர் தற்கொலைக்கு திமுக அரசே பொறுப்பு’

பகுதிநேர ஆசிரியர் கண்ணன் உயிரிழப்புக்கு திமுக அரசே பொறுப்பு என அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஊழல் பணத்தில் கொழுத்துத் திரியும் திமுகவினருக்கு, சாதாரண பொதுமக்களின் வலியும் வாழ்க்கையும் எப்படி புரியும் என அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். கண்ணனின் குடும்பத்திற்கு ₹50 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.


