News March 9, 2025
ஏழை நாயகன் மறைந்தார்.. உதயநிதி நேரில் அஞ்சலி

ஏழை மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த தலைசிறந்த நரம்பியல் மருத்துவர் வேல் முருகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார். சென்னையில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி செலுத்தினார். இதன்பின் பேசிய அவர், கருணாநிதி, ஸ்டாலின் மீது பற்றுக் கொண்டிருந்த வேல் முருகேந்திரன், என் மீது பாசமும் – அக்கறையும் கொண்டிருந்தார். அவரது மறைவு பெரும் பேரிழப்பு என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News August 16, 2025
வடை சுடுவதில் PM சாதனை: CPM சண்முகம் தாக்கு

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் சிறப்புரையாற்றி இருந்தார் PM மோடி. இளைஞர்களுக்கான திட்டம், ஜிஎஸ்டி உள்பட 8 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில், இவரது உரையை விமர்சித்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுவதையே வழக்கமாக வைத்துள்ள PM மோடி, இம்முறை 103 நிமிடங்கள் பேசி அதிக வடைகளை சுட்டு சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்
News August 16, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪தமிழகத்தில் <<17421791>>பெண்கள் <<>>பாதுகாப்பாக உள்ளனர்.. கவர்னருக்கு CM ஸ்டாலின் பதிலடி
✪அமைச்சர் ஐ. <<17422630>>பெரியசாமிக்கு <<>>சொந்தமான இடங்களில் ED ரெய்டு
✪தங்கம் <<17422026>>விலை <<>>மேலும் ₹40 குறைவு
✪உக்ரைனில் <<17420797>>போர் <<>>நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு.. டிரம்ப்
✪சென்னை <<17421191>>கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்<<>>: சாம்பியன் பட்டம் வென்றார் பிரனீஷ்
News August 16, 2025
வசூல் Record படைக்கும் கூலி

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான் உள்ளிட்ட பெரும் பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதும், Box office-ல் மாஸ் காட்டுகிறது. படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ₹151 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2-வது நாளான நேற்று ₹50+ கோடி ஈட்டி, 2 நாளில் வசூல் ₹200+ கோடியை தாண்டியுள்ளது.