News March 26, 2025
மம்முட்டிக்காக பூஜை: மத சர்ச்சையில் மோகன்லால்!

மம்முட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து, சபரிமலை கோயிலில் சிறப்பு பூஜை செய்தார் மோகன்லால். ஆனால், மம்முட்டி ஒரு முஸ்லிம். அவருக்காக மோகன்லால் எப்படி இந்து கடவுளிடம் பூஜை செய்யலாம்? என ஒருதரப்பினர் பிரச்னை செய்து வருகின்றனர். இதற்கு விளக்கமளித்த மோகன்லால், ‘மம்முட்டி எனது நண்பர். கடவுளிடம் வேண்டுவது என்பது எனது பெர்சனல். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 29, 2025
தங்கத்தை விட வேகமாக உயரும் விலை

நகைகளின் விலையை பொறுத்தவரை, நாம் பெரும்பாலும் தங்கத்தை மட்டுமே பார்க்கிறோம். ஆனால், அதனுடன் சேர்ந்தே உயரும் வெள்ளியின் விலையை நோட் செய்ய மறந்துவிடுகிறோம். ஆனால், கடந்த சில மாதங்களாகவே தங்கம், வெள்ளி என இரண்டும் உச்சம் தொட்டு நுகர்வோரை மலைப்படையச் செய்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹113க்கு விற்பனையாகிறது. ஜனவரி மாதத்தில் இதன் விலை ₹100க்கு கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 29, 2025
நிர்வாண PHOTOS வெளியிட்டது யார்? மெலானியா ஓபன் டாக்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா, ஒரு முன்னாள் மாடலாவார். இந்நிலையில், அவர் மாடலிங் செய்தபோது வெளியான நிர்வாணப் படங்கள், 2016 அதிபர் தேர்தலின் போது, பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை செய்தது யார் என்பது அப்போது மர்மமாகவே இருந்தது. இந்நிலையில், தன்னை அவமானப்படுத்தவே, டிரம்ப்பின் அப்போதைய அரசியல் ஆலோசகரான ரோஜர் ஸ்டோன், அதை வெளியிட்டதாக, மெலானி தற்போது தெரிவித்துள்ளார்.
News March 29, 2025
ஜோகோவிச் ஆட்டத்தை கண்டு ரசித்த மெஸ்ஸி

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன், டென்னிஸ் நட்சத்திரம் ஜோகோவிச் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறினார். இந்த ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்த மெஸ்ஸி, போட்டிக்கு பின் ஜோகோவிச்சுடன் புகைப்படம் எடுத்தார். அப்போது இருவரும் தங்கள் ஜெர்ஸியை மாற்றிக்கொண்டனர்.