News March 22, 2024
இன்று அமைச்சராகிறார் பொன்முடி

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்முடிக்கு இன்று அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். பொன்முடியின் குற்ற வழக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டபோதிலும் அவரை அமைச்சராக்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து “அவருக்கு சட்டம் தெரியுமா தெரியாதா” என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 31, 2026
RC புக் தொலைந்து விட்டதா? ஈசியா வாங்கிடலாம்

Parivahan Sewa இணையத்தில் Online Services-ஐ கிளிக் செய்து,Vehicle Related Services-ஐ தேர்ந்தெடுக்கவும். அதில் RC நகலுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். பணம் கட்டினால் ரசீது கிடைக்கும். அத்துடன் Form 26, FIR நகல், Insurance சான்றிதழ், சேசிஸ் & இன்ஜின் பென்சில் பிரிண்ட், Address proof, RC தொலைந்ததாக பிரமாண பத்திரங்களுடன் சேர்த்து RTO ஆபீசில் சமர்ப்பிக்க வேண்டும். SHARE.
News January 31, 2026
வெற்றிக் கூட்டணியை கண்டறிவதில் சிக்கல்: GK மணி

கூட்டணி தொடர்பாக அனைத்து தரப்பும் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாமக(ராமதாஸ் அணி) கெளரவ தலைவர் GK மணி தெரிவித்துள்ளார். விருப்பமனு அளித்தவர்களிடம் தைலாபுரத்தில் இன்றுமுதல் நேர்காணல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், வெற்றிக் கூட்டணியை கண்டறிவதில் சிக்கல் இருப்பதால் தாமதம் ஏற்படுவதாக கூறினார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News January 31, 2026
துப்பாக்கிச் சத்தத்தால் அதிரும் ஜம்மு காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரின் டோல்காமில் பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூட்டில் நடத்தியுள்ளனர். ஜனவரி 18-ம் தேதி தொடங்கிய ‘ஆபரேஷன் த்ராஷி-I’-ன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது, இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதால் ராணுவம், போலீஸ் மற்றும் CRPF இணைந்து அப்பகுதியை கட்டுப்பாட்டில் எடுத்து, இணைய சேவையையும் தடை செய்துள்ளனர்.


