News March 22, 2024
அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்முடிக்கு, ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது அமைச்சர் பதவி பறிபோனது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 26, 2025
₹5-க்கு ஸ்பெஷல் மினி மீல்ஸ்

மறைந்த Ex PM வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் 45 இடங்களில் மலிவு விலை அடல் கேன்டீன்கள் திறக்கப்பட்டுள்ளன. ₹5-க்கு 2 சப்பாத்தி, சாதம், பருப்பு குழம்பு, கூட்டு, ஊறுகாய் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேரின் பசி போக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. TN-ல் அம்மா உணவகம், AP-ல் அண்ணா கேன்டீன், தெலங்கானாவில் இந்திராம்மா கேன்டீன் போல டெல்லியில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
காலையில் இதை செய்தால் கேன்சர் வராது!

அரை இன்ச் பச்சை மஞ்சள் + 1 நெல்லிக்காய் + இரண்டு இன்ச் அளவில் இஞ்சி துண்டு + இரண்டு மிளகு + தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும், வளர்சிதை மாற்றம் மேம்படும். கேன்சர் போன்ற கொடிய நோய்கள் உங்களை அண்டாது என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். அனைவரும் பயனடைய SHARE பண்ணுங்க.
News December 26, 2025
விஜய்க்கு இதை சொல்ல தைரியம் இருக்கா? முத்தரசன்

சாதி, மத அரசியலை செய்யும் பாஜக தான் தீய சக்தி என முத்தரசன் தெரிவித்துள்ளார். TN-ல் மத நல்லிணக்கத்தை சீரழிக்கும் பாஜகவை தீய சக்தி என சொல்லும் தைரியம் விஜய்க்கு இருக்கிறதா என கேட்ட அவர், அப்படி அவர் பேசாமலிருப்பது மத அரசியலுக்கு ஆதரவளிக்கிறார் என்றுதானே பொருள் எனவும் விமர்சித்துள்ளார். கொள்கையின்றி வெறுமனே வெறுப்பு அரசியலைப் பேசுவதால் எந்தவொரு நன்மையும் விஜய்க்கு கிடைக்காது எனவும் கூறியுள்ளார்.


