News April 17, 2025
திமுகவை வீட்டுக்கு அனுப்ப பொன்முடி போதும்: ராமலிங்கம்

பொன்முடியின் பேச்சால், அவரின் மீது பெண்கள் கோபத்தோடு இருக்கின்றனர்; திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படுவதற்கு அவர் மாதிரியான ஆட்களே போதும் என்று பாஜக துணைத் தலைவர் ராமலிங்கம் விமர்சித்துள்ளார். மேலும், பொன்முடிக்கு சேரும் பெருமையெல்லாம், முதல்வர் ஸ்டாலினையும் சேரும் என சாடிய அவர், இதுபோன்ற விவகாரங்களை திசை திருப்பவே திமுக, அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News November 21, 2025
BREAKING: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

திருவாரூரில் அமமுக நிர்வாகி மணிகண்டன் 500-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். Ex அமைச்சர் காமராஜ் முன்னிலையில், தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்து கொண்ட அவர், மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி எனக் கூறினார். NDA கூட்டணியிலிருந்து TTV விலகிய பிறகு சென்னை, தஞ்சை, வேலூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து <<18211919>>அமமுக நிர்வாகிகள்<<>> அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
News November 21, 2025
கில்லுக்கு இன்று பிட்னஸ் டெஸ்ட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் கழுத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சுப்மன் கில் பாதியில் வெளியேறினார். இதனால் கவுகாத்தியில் நடக்கும் 2-வது டெஸ்டில் அவர் விளையாடுவதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் அவருக்கு இன்று பிட்னஸ் டெஸ்ட் எடுக்கப்படுகிறது. இதன் முடிவில் கில் நாளை தொடங்கும் 2-வது டெஸ்டில் விளையாடுவாரா, மாட்டாரா என்பது தெரியவரும்.
News November 21, 2025
ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் PM மோடி

தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் PM மோடி பங்கேற்கிறார். 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 3 அமர்வுகளில் PM மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலையான பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், எதிர்கால தொழில்நுட்பம் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டிற்கு மத்தியில், சில தலைவர்களுடன் PM மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


