News March 20, 2024
பொன்முடி வழக்கு நாளை விசாரணை

பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால் மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தமிழக அரசு பரிந்துரைத்ததை ஆளுநர் ரவி நிராகரித்ததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Similar News
News November 5, 2025
பொதுத்தேர்வுக்காக 2 – 5 நாள்கள் வரை விடுமுறை

2025 – 26 கல்வி ஆண்டிற்கான <<18193947>>10<<>>, 1<<18194621>>2-ம் வகுப்பு<<>> பொதுத்தேர்வு அட்டவணை நேற்று வெளியானது. அதில், ஒவ்வொரு தேர்வுக்கும் 2 – 5 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, ஒவ்வொரு தேர்வுக்கும் இடையேயான இந்த இடைவெளி என்பது மாணவர்கள் சிரமமின்றி படிக்கவும், மன அழுத்தமின்றி தேர்வு எழுதவும் உதவும் என உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
News November 5, 2025
கவர்ச்சி பிம்பத்தை மாற்ற முயலும் ஸ்ரீலீலா

தெலுங்கு படங்களில் தன்னை பெரும்பாலும் கிளாமர் வேடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீலீலா வேதனை தெரிவித்துள்ளார். அழுத்தமான கேரக்டர் கிடைக்காத விரக்தியில் இருந்த தனக்கு ‘பராசக்தி’ பட வாய்ப்பு கிடைத்ததாகவும், இப்படம் தனது திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இதன்பிறகு, தன் மீது விழுந்துள்ள கவர்ச்சி பிம்பம் மாறத்தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
10-வது போதும்: 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணிகள்!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: ₹15,900- ₹50,400 வயது: 18- 30 விண்ணப்பிக்க <


