News April 18, 2025
பள்ளிகளில் பொங்கல்-சாம்பார்: அமைச்சர் கீதா ஜீவன்

பள்ளிகளில் தற்போது மாநில அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகக் கூறினார். தற்போது காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமா வழங்கப்படுவதாகவும், அதற்குப் பதில் இனி பொங்கல்-சாம்பார் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News November 16, 2025
நவம்பர் 16: வரலாற்றில் இன்று

*உலக சகிப்புத் தன்மை நாள். *தேசிய பத்திரிக்கை தினம். *1801 – விடுதலை போராட்ட வீரர் ஊமைத்துரை இறந்தநாள். *1849 – அரசுக்கெதிராகப் புரட்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டி, ரஷ்ய எழுத்தாளரான பியோதர் தஸ்தயெவ்ஸ்கிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. *1945 – யுனெஸ்கோ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. *1962 – நடிகை அம்பிகா பிறந்தநாள். *1983 – இசையமைப்பாளர் தமன் பிறந்தநாள்.
News November 16, 2025
உருவ கேலிக்கு நச் பதில் கொடுத்த கயாடு

உருவ கேலி குறித்து நடிகை கயாடு லோஹரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எல்லோருக்கும் உடல் அமைப்பு ஒரே மாதிரி இருக்காது, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், அனைவருக்கும் ஒரே மாதிரியான உடல் அமைப்பு இருந்தால் தனித்தும் இல்லாமல் போய்விடும் எனவும், இன்றைய நிலையில், சோஷியல் மீடியாவில், உருவ கேலி குறித்த விமர்சனங்களில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் கூறினார்.
News November 16, 2025
பிஹாரில் திடீரென 3 லட்சம் வாக்காளர்கள் வந்தது எப்படி?

பிஹாரில் SIR-ன் முடிவில் 7.42 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, தேர்தலின் போது திடீரென 3 லட்சம் உயர்ந்து 7.45 கோடியாக மாறியது எப்படி என காங்., கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள ECI அதிகாரிகள், வேட்புமனு தாக்கலுக்கு 10 நாள்கள் முன்பு வரை, வாக்குரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்ற விதி உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தகுதியான வாக்காளர்கள் இணைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.


