News December 31, 2024
பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் அப்டேட்

TN அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வரும் 3ஆம் தேதி முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு காலை, மாலையில் தலா 100 பேருக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளன.
Similar News
News November 21, 2025
CINEMA 360°: ‘அமரன்’ படத்துக்கு சிறப்பு கௌரவம்

*50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி மீண்டும் ‘SHOLAY’ படம் வெளியாகிறது. *’டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசரை இன்று ரஜினிகாந்த் வெளியிட உள்ளார். *கவினின் ‘மாஸ்க்’ படத்தின் 4-வது சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. * 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக ‘அமரன்’ திரையிடப்படுகின்றது.
News November 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 526
▶குறள்:
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.
▶பொருள்: பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.
News November 21, 2025
காஷ்மீர் டைம்ஸில் சோதனை: வெடி பொருள்கள் பறிமுதல்

தேச விரோத செயல்களை ஊக்குவிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஜம்முவில் உள்ள ‘காஷ்மீர் டைம்ஸ்’ அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. மாநில புலனாய்வு பிரிவின் சோதனையில் Ak-47 தோட்டாக்கள், பிஸ்டல் தோட்டாக்கள் மற்றும் மூன்று grenade levers உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வெடிபொருட்கள் குறித்து தீவிர விசாரணையும் நடத்தப்படுகிறது. ‘காஷ்மீர் டைம்ஸ்’ நாளிதழ் 1954-ல் இருந்து செயல்பாடுகிறது.


