News January 24, 2025
பொங்கல் பரிசுத் தொகுப்பு.. நாளையே கடைசி

பொங்கலையொட்டி ரேஷன் கடைகளில் 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, முழு கரும்பு, வேட்டி, சேலையை அரசு வழங்குகிறது. இதற்கான கால அவகாசம், பொங்கலுக்கு முன்பு முடிந்தது. எனினும், வாங்காதோருக்காக பொங்கலுக்கு பிறகும் தொகுப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு 2ஆவது முறையாக 25ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்திருந்தார். அதன்படி, நாளையுடன் அவகாசம் நிறைவடைகிறது. உடனே செல்லுங்க.
Similar News
News August 27, 2025
விஜய் கூட்டணி வியூகம்.. திமுக அதிர்ச்சி

TVK யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் விஜய் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வாக்குத் திருட்டை கண்டித்து பிஹாரில் நடைபெறும் 16 நாள் பிரச்சாரப் பேரணியில் விஜய் பங்கேற்க முயல்வதாகவும், காங்., உடனான கூட்டணிக்கு இப்பேரணியில் பங்கேற்றால் பலனளிக்கும் என விஜய் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது. விஜய்யின் முயற்சி சரியா கமெண்ட் பண்ணுங்க.
News August 27, 2025
Tax Vs Tariff.. என்ன வித்தியாசம்?

USA-ன் வரிவிதிப்பு தொடர்பான செய்திகளில் ‘Tariff’ என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம். இந்நிலையில், இதற்கும் Tax-க்கும் என்ன வித்தியாசம் என்று தற்போது பார்க்கலாம். Tax என்பது அரசுக்கு வரி செலுத்துவோர் மீது விதிக்கப்படும் கட்டணம் ஆகும். இது நேரடி வரி, மறைமுக வரி என இரு வகைப்படும். Tariff என்பது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் ஆகும்.
News August 27, 2025
அஸ்வினுக்கு நெகிழ்ச்சியுடன் பிரியா விடை அளித்த CSK

அஸ்வினை ‘கேரம் பால் திரிபுர சுந்தரன்’ என வர்ணித்து CSK நிர்வாகம் பிரியாவிடை அளித்துள்ளது. CSK-ன் பாரம்பரியத்தை தூணாக நிறுத்தி, சேப்பாக்கத்தை ஒரு கோட்டையாக கர்ஜிக்க வைத்ததாகவும், சூப்பர் கிங்காக தொடங்கிய அவரது பயணம், ஒரு சூப்பர் கிங்காகவே முடிந்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும், என்றென்றும் அவர் சிங்கம் தான் எனவும், என்றென்றும் அவர் நம்மில் ஒருவர் தான் என்றும் கூறியுள்ளது.