News December 28, 2024
2.20 கோடி பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: அரசு

யார்-யாருக்கு <<15005578>>பொங்கல் பரிசு<<>> தாெகுப்பு வழங்கப்படும் என்பது குறித்து அரசு அறிவித்துள்ளது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது. இதனால் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் பயனடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News September 12, 2025
கொலுசு அணிவதன் நன்மைகள்

☆வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகமாகும். இதனால் ஆயுள் விருத்தியாகும் என்கிறது ஆயுர்வேதம். ☆கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடுகிறது. ☆குதிகால் நரம்பை தொட்டுக் கொண்டிருப்பதால் மூளைக்கு செல்லும் உணர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. ☆இதனால் கோபம் & உணர்ச்சி வசப்படுதல் கட்டுப்படும். SHARE IT
News September 12, 2025
‘மாணவர்கள் மட்டும்’ பஸ்கள்: பாராட்டிய CM ஸ்டாலின்

சென்னையில், சமீபத்தில் பள்ளி மாணவர்கள் மட்டும் பயணிக்கும் வகையில், சிறப்பு பஸ் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், ‘மாணவர்கள் மட்டும்’ சிறப்பு பஸ் திட்டத்தை போக்குவரத்து அமைச்சரும், அதிகாரிகளும் விழிப்புடன் கண்காணித்து மேலும் மேலும் சிறப்பாக செயல்படுத்திட வாழ்த்துவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
சிம்பு மேல தப்பில்ல: அஷ்வத்

‘STR 51’ ஷூட்டிங் இன்னும் தொடங்காததற்கு சிம்பு காரணமல்ல, தான் திரைக்கதை எழுதுவதில் தொய்வு ஏற்பட்டதாலேயே தாமதமாவதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். குத்து, தம், மன்மதன் காலகட்ட சிம்புவை மீண்டும் அனைவரும் ரசிக்கும்படி திரையில் கொண்டுவர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படம் 2026-ல் ரிலீஸாகும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இதனால், சிம்பு ரசிகர்கள் படுகுஷியாக உள்ளனர்.