News January 2, 2025
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்..!

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் C மற்றும் D பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 163.81 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
Similar News
News September 11, 2025
ASIA CUP: வங்கதேசத்திற்கு 144 ரன்கள் இலக்கு

ஆசியக் கோப்பையில் ஹாங்காங்கிற்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஹாங்காங் வீரர்கள் ஒருநாள் போட்டியை போல நிதானமாகவே விளையாடினர். இதனால் ரன்கள் ஆமைவேகத்திலேயே ஏற, அதிகபட்சமாக நிஷகத் கான் 42 ரன்கள் எடுத்தார். இறுதியில் யாஷிம் முர்டசா அதிரடியாக 28 ரன்கள் அடித்து அணியை சற்று மீட்டெடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹாங்காங் 143/7 ரன்களை எடுத்துள்ளது.
News September 11, 2025
கனமழை: நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

நாளை மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்று இரவு வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, தி.மலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
News September 11, 2025
விநோத உணவுகள்: நீங்க ட்ரை பண்ணுவீங்களா?

உலகில் உள்ள ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் பிரத்யேக பாரம்பரிய உணவு முறைகள் உள்ளன. புவியியல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு மக்களிடையே உணவு முறைகளில் வேறுபாடுகள் காணப்படுகிறது. அப்படி, ஒரு சாரார் விரும்பி உண்ணும் உணவு, இன்னொரு சாராருக்கு வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில், வியட்நாமின் விநோத உணவுகளை மேலே பட்டியலிட்டுள்ளோம். அதை Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்