News June 4, 2024
குமரியை மீட்க போராடும் பொன் ராதாகிருஷ்ணன்

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் குமரியில் வெற்றி பெற்ற பொன் ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சராக பதவி வகித்தார். பிறகு, குமரியில் வெற்றி பெற அவர் தொடர்ந்து போராடி வருகிறார். கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸின் வசந்த குமாரிடன் தோல்வியுற்ற அவர், அவரது மறைவுக்கு பின் நடந்த இடைத்தேர்தலில், அவரது மகன் விஜய் வசந்திடம் தோற்றோர். தற்போதும், பொன் ராதாகிருஷ்ணன் தோல்வியடைந்துள்ளார்.
Similar News
News August 7, 2025
வாடகைக்கு மட்டுமே ₹1,500 செலவு: PM வருத்தம்

டெல்லியில் 50 வெவ்வேறு இடங்களில் பல மத்திய அமைச்சகங்கள் இயங்கி வருவதாக PM மோடி தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் கால கட்டிடங்களில் போதிய வசதிகள் இன்றி அமைச்சகங்கள் செயல்பட்டு வருவதாகவும், இவற்றிற்கு வாடகை ₹1,500 கோடி செலவாவதாகவும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். ஆனால், ‘விக்ஷித் பாரத்’ தொலைநோக்கு பார்வையின் ஒருபகுதியாக புதிய கட்டிடங்களுக்கு அமைச்சகங்கள் மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
இனவெறி.. 6 வயது இந்திய சிறுமி மீது தாக்குதல்

அயர்லாந்தில் இனவெறி காரணமாக இந்தியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் பிறப்புறுப்பிலும், சைக்கிளை ஏற்றி 12-14 வயது சிறுவர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அயர்லாந்தில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட 5வது தாக்குதலாகும். முன்னதாக, ஆஸ்திரேலியாவிலும் இந்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
News August 7, 2025
டிரம்ப் விதித்ததற்கு இதுதான் காரணமா?

டிரம்ப்பின் 50% வரி விதிப்பிற்கு, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் தவிர வேறொரு காரணமும் இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா – சீனா உறவு மேம்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர். 2019க்கு பிறகு PM மோடி முதல்முறையாக சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். BRICS நாடுகள் ஒன்றிணைந்தால் அமெரிக்க டாலருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என டிரம்ப் அச்சப்படுவதாக கூறுகின்றனர்.