News October 25, 2024

கீழ்வாதப் பிரச்னையை விரட்டி அடிக்கும் மாதுளை தேநீர்

image

மழைக்காலத்தில் அதிகரிக்கும் கீழ்வாதம் (RA) போன்ற ஆட்டோ இம்யூன் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை பெருக்க மாதுளை தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மாதுளை தோல், மஞ்சள், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றை பொடித்து நீரில் கலந்து, கொதிக்க வைத்து வடிகட்டி, எலுமிச்சைச் சாறு பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான மாதுளை தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

Similar News

News November 14, 2025

பிஹார் தேர்தல் முடிவு: எந்த நேரத்திலும் மாற்றம்

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் கூட மாற்றம் ஏற்படும் என தெரிகிறது. NDA – 91 இடங்களிலும், ஆர்ஜேடி – காங்கிரஸின் மகா (MGB) கூட்டணி 63 இடங்களிலும், ஜன்சுராஜ் 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. குறிப்பாக, NDA கூட்டணி வேட்பாளர்கள் பலர் 2000 முதல் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே முன்னிலையில் இருப்பதால், எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.

News November 14, 2025

தேஜஸ்வி யாதவ் முன்னிலை

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகிக்கிறார். இந்த தொகுதியில் பாஜக சார்பாக சதீஸ் குமார் என்பவர் வேட்பாளராக உள்ளார். ஆனால் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

News November 14, 2025

பிஹார் தேர்தல்.. பாஜக முன்னிலை

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நொடிக்கு நொடி மாற்றம் நிகழ்கிறது. ஜேடியூ – பாஜக கூட்டணி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நேர நிலவரப்படி, BJP -39, JDY -30, LJP(RV) 3 என மொத்தம் 72 இடங்களில் NDA கூட்டணியும், RJD – 33, cong – 8, CPI (ML) 3 என MGB கூட்டணி 44 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

error: Content is protected !!