News April 20, 2024
7 தனித் தொகுதியிலும் 2019ஐ விட மந்தமான வாக்குப்பதிவு

கடந்த 2019 தேர்தலை விட இந்த 2024 தேர்தலில் தமிழகத்தில் உள்ள 7 தனித் தொகுதிகளின் வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது. திருவள்ளூர் (72.33 – 68.31%), காஞ்சிபுரம் (75.28 – 71.55%), விழுப்புரம் (78.62 -76.44%), நீலகிரி (73.99 – 70.93%), சிதம்பரம் (77.91 – 75.32%), நாகை (76.88 – 71.55% ), தென்காசியில் (71.37 – 67.55%) வாக்குகள் பதிவாகியுள்ளன. நாகையில் கடந்த தேர்தலை விட 5% வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.
Similar News
News August 18, 2025
BSF-ல் 3,580 பணியிடங்கள் அறிவிப்பு

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) உள்ள பெயிண்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணிகளுக்கான கான்ஸ்டபிள் (Tradesman) பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள்: 3,588. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு/ ITI. வயது வரம்பு: 18 – 25. சம்பளம்: ₹21,700 – ₹69,100. எழுத்து, உடல் திறன் உள்ளிட்ட தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.23. விண்ணப்பிக்க இங்கே <
News August 18, 2025
CINEMA ROUNDUP: மீண்டும் காக்கி உடை அணியும் சூர்யா!

★ஆகஸ்ட் 20-ம் தேதி அனுஷ்காவின் ‘காட்டி’ படத்திலிருந்து ‘தசோரா’ பாடல் ரிலீசாகவுள்ளது.
★அட்லீ- அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
★அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘பாம்ப்’ படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ளது.
★‘ஆவேசம்’ பட இயக்குநர் ஜீது மாதவன் இயக்கும் படத்தில் சூர்யா போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.
News August 18, 2025
‘INDIA’ கூட்டணியில் இதுவரை யாரும் பரிசீலனையில் இல்லை

துணை ஜனாதிபதி வேட்பாளர் பரிசீலனையில் இதுவரை யாரும் இல்லை என ‘INDIA’ கூட்டணி தெரிவித்துள்ளது. NDA கூட்டணியில், CP ராதாகிருஷ்ணன் களமிறங்கியுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வில் ‘INDIA’ கூட்டணி தீவிரம் காட்டியுள்ளது. இதனிடையே, திமுக MP திருச்சி சிவா பரிசீலனையில் உள்ளதாக NDTV செய்தி வெளியிட்டது. அதனை மறுத்துள்ள ‘INDIA’ கூட்டணி, வேட்பாளருக்கான ஆலோசனை தொடர்வதாகவும் விளக்கம் அளித்துள்ளது.