News March 28, 2024
தமிழகத்தில் மகன்களின் அரசியல்

கட்சித் தலைவர்கள் மகன்களின் அரசியலால், தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. உதயநிதி ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், துரை வைகோ, விஜய பிரபாகரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முந்தைய தேர்தல்களில் குடும்ப அரசியலுக்கு எதிராக பிரசாரம் நடந்த நிலையில், இம்முறை தலைவர்களும், மகன்களும் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதை மக்கள் கண்டு வருகின்றனர். இதை மக்கள் ஏற்பார்களா என காலமே முடிவு செய்யும்.
Similar News
News January 22, 2026
திமுகவில் கூண்டோடு இணைகின்றனர்.. OPS அதிர்ச்சி

CM ஸ்டாலின் தலைமையில் வைத்திலிங்கம் முன்னிலையில், தானும் திமுகவில் இணையவுள்ளதாக அதிமுக Ex MLA குன்னம் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். ஜன.26-ல் தஞ்சையில் நடைபெறும் விழாவில் தன்னுடன் 250 பேர் திமுகவில் சேரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், வைத்திலிங்கம், தற்போது ராமச்சந்திரன் என அடுத்தடுத்து OPS-ன் ஆதரவாளர்கள் இணைவது பேசுபொருளாகியுள்ளது.
News January 22, 2026
அடுத்த 25 வருடங்களுக்கான தேர்தல் அறிக்கை ரெடி: தவெக

திமுக, அதிமுக போலவே தவெகவும் தேர்தல் அறிக்கையை தயார் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பணம், இலவச பொருள்கள், லேப்டாப் என மற்ற கட்சிகள் கொடுப்பது தேர்தலுக்காகவே என மக்களுக்கு தெரியும் என்றும், தவெக நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே வழங்கும் எனவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அடுத்த 25 வருடங்களுக்கான தேர்தல் அறிக்கையை விஜய் தருவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 22, 2026
காலை வெறும் வயிற்றில் சாப்பிட இவை தான் பெஸ்ட்

★பாதாம்: வைட்டமின் K, நல்ல கொழுப்புகள் கொண்ட பாதாமை ஊற வைத்து சாப்பிட்டால் உடலுக்கு எனர்ஜியை கொடுக்கும் ★சியா சீட்ஸ்: இரவு ஊற வைத்து காலையில் சாப்பிட்டால், செரிமானம் நன்றாக இருக்கும் ★கருப்பு உலர் திராட்சை: நார் சத்து அதிகம் இருப்பதால், கேஸ்ட்ரிக் பிரச்னைக்கு மிகவும் நல்லது ★வழுக்கை தேங்காய்: Medium Chain Triglycerides என்ற கொழுப்பு இருப்பதால், செரிமானத்துக்கு நல்லது. SHARE IT.


