News February 18, 2025

NEPஐ வைத்து தமிழகத்தில் அரசியல்: தர்மேந்திர பிரதான்

image

தேசிய கல்விக் கொள்கையை வைத்து தமிழகத்தில் சிலர் அரசியல் செய்து வருவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் NEPஐ அமல்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழக மாணவர்கள் பல்வேறு மொழிகளை கற்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், NEP மூலம் குறிப்பிட்ட மொழியை கற்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Similar News

News March 6, 2026

‘ரஜினி 173’ சிக்னல் கொடுத்த சிபி

image

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். ஒன் லைனர் சொல்லி ரஜினியிடம் ஓகே வாங்கியிருந்த சிபி சக்கரவர்த்தி, தற்போது Bounded ஸ்கிரிப்டை எழுதி முடித்துள்ளார். இதையடுத்து, மே மாதத்தில் ஷுட்டிங்கை தொடங்குவதற்கான Pre-Production வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 2027 பொங்கல் ரிலீஸை குறிவைத்துள்ள படக்குழு, விரைவில் முழு Cast & Crew-ஐ அறிவிக்கவுள்ளது.

News March 6, 2026

தாயுமானவர் பொன்மொழிகள்

image

*நல்ல மனதுக்கு உலகம் நல்லதாகவும், கெட்ட மனதுக்கு உலகம் கெட்டதாகவும் தென்படுகிறது *நல்லெண்ணம் வளர வளர அது நமது உடலில் ஊறியதாக ஆகிவிடுகிறது. பிறகு கெட்ட எண்ணம் என்பதே வருவதில்லை. இது எல்லாவற்றிற்கும் அடிப்படை பழக்கமே *நல்ல எண்ணம் நமக்கு நல்ல நலம் தந்து, வாழ்வினை வளமடையச் செய்கிறது *ஒழுக்கத்தில் நிலைநின்றவர்களுக்கு மன உறுதி அதிகரிக்கிறது. பின்னர் அதுவே ஆத்ம சக்தியாக வடிவம் எடுக்கிறது.

News March 6, 2026

ஈரானின் உயர் தலைவரை தேர்வு செய்வேன்: டிரம்ப்

image

ஈரானின் புதிய உயர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் தனது பங்கு இருக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உயர் தலைவராக கமேனியின் மகன் முஜ்தபா பதவியேற்பதை தான் விரும்பவில்லை என தெரிவித்த அவர், அமைதியை நிலைநாட்டக் கூடிய ஒருவர் பதவிக்கு வரவேண்டும் என்றார். ஈரானியர்கள் நேரத்தை வீணடித்து கொண்டிருப்பதாகவும், வெனிசூலாவை போல ஈரானின் உயர் தலைவர் தேர்வில் தனது தலையீடு இருக்கும் எனவும் அவர் கூறினார்.

error: Content is protected !!