News June 1, 2024
தியானத்தில் அரசியல் செய்வதா?: அண்ணாமலை

மோடி 3ஆவது முறையாக பிரதமராவதை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், INDIA கூட்டணியின் இன்றைய கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை எனவும், இதனால் எதிர்க்கட்சிகள் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மோடியின் தியானத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
Similar News
News September 19, 2025
தனியாக இருக்கும் போது நீங்க என்ன பண்ணுவீங்க?

பிறருடன் இருப்பதை விட, தனிமையில் இருக்கும்போது ஒருவரின் குணத்தில் பெரிய மாற்றங்களை காண முடியும். நம்மை Judge செய்ய முடியாது என்ற தைரியத்தில் பல விநோதமான பழக்கங்களும் வெளிவரும். மொக்கையாக இருந்தாலும் பிடித்த படத்தை பார்ப்பதில் தொடங்கி, பாடுவது, டான்ஸ் ஆடுவது, புத்தகம் படிப்பது, சமைப்பது என பல வேலைகளிலும் ஈடுபடுவோம். அப்படி நீங்க தனியாக இருக்கும் போது, என்ன பண்ணுவீங்க?
News September 19, 2025
BREAKING: ₹18,000 வரை விலை குறைந்தது!

GST சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் கார், பைக்குகளின் விலைகளை குறைத்து ஒவ்வொரு நிறுவனங்களாக அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சுசுகி நிறுவனமும் இணைந்துள்ளது. அதன்படி Access (₹8,523), Avenis (₹7,823) Burgman Street (₹8,373), GIXXER (₹11,520), GIXXER 250 (₹16,525), V-Strom SX (₹17,982) விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வரும் 22-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
News September 19, 2025
மீண்டும் உயர தொடங்கிய அதானி குழும பங்குகள்

வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை தொடங்கி, செயற்கையான முறையில் அதானி குழுமம் பங்குகளில் முதலீடு செய்வதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் குற்றம்சாட்டி இருந்தது. ஆனால் அது தவறான குற்றச்சாட்டு என செபி நேற்று விரிவான அறிக்கையை வெளியிட்டது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் இன்று லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. அதானி குழுமத்தின் பங்குகள் 10% வரை உயர்வுடன் வா்த்தகத்தை தொடங்கியுள்ளன.