News October 13, 2025
அரசியல் வெற்றியா? துயரில் துவள்பவர்களுக்கான நீதியா?

கரூர் துயரம், திமுக அரசின் சதி என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டால் ‘Stand with Viay’ என்று ஒரு கூட்டம் கிளம்பியது. இந்த சமயத்தில் அரசியல் பேசாமல், பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்க வேண்டும் என்று ‘Stand with victims’ என்றும் நெட்டிசன்கள் குரல் எழுப்பினர். இந்நிலையில், CBI விசாரணைக்கு மாற்றம் என்ற SC-ன் தீர்ப்பு தவெகவிற்கு கிடைத்த வெற்றி என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்த தீர்ப்பு யாருக்கு வெற்றி?
Similar News
News December 9, 2025
கோவா தீ விபத்து: இண்டர்போல் உதவியை நாடும் போலீஸ்

கோவா <<18500834>>இரவு விடுதி தீ விபத்தில்<<>> 25 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து நடந்த சில மணி நேரத்தில் விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்து தப்பியோடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தப்பியோடிய கௌரவ் மற்றும் சவுரப்பை பிடிக்க, இண்டர்போல் உதவியை போலீசார் நாடியுள்ளனர். இதற்கிடையே, இவர்களுக்கு சொந்தமான இன்னொரு விடுதி ஒன்று, அரசு நிலத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
News December 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 544 ▶குறள்: குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. ▶பொருள்: குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.
News December 9, 2025
₹2.43 கோடியை வேண்டாம் என்று சொன்ன வீராங்கனை

ஓய்வு பெற்ற ஃபிரெஞ்சு டென்னிஸ் வீராங்கனை கரோலின் கார்சியா (32), தனது யூடியூப் சேனலில் டென்னிஸ் வீரர்களின் பேட்டிகளை வெளியிட்டு வருகிறார். அவரது சேனலுக்கு, சூதாட்ட நிறுவனம் ஒன்று ₹2.43 கோடி ஸ்பான்சர்ஷிப் செய்ய முன்வந்துள்ளது. ஆனால், அதை மறுத்து, பணத்தை விட தனது நோக்கம் மதிப்புமிக்கது என தெரிவித்துள்ளார். மேலும், டென்னிஸ் சார்ந்த ஆரோக்கியமான வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.


