News March 5, 2025
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: சீமான்

எஸ்.டி.பி.ஐ தலைவர் ஃபைசி கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சீமான் விமர்சித்துள்ளார். தன்னாட்சி அமைப்புக்களைத் தனது கைப்பாவையாக்கி, மத்திய அரசு அரசியல் எதிரிகளை தொடர்ந்து பழி வாங்குவதாகவும், இது நாட்டை பேரழிவை நோக்கிக் கொண்டு செல்லும் எனவும் அவர் சாடியுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஃபைசியை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது.
Similar News
News March 6, 2025
7ஆம் தேதி வருகிறான் ‘பைசன்’

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் முழுக்க முழுக்க கபடியை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘பைசன்’. படப்பிடிப்பு முடிந்து, ரிலீஸ் செய்வதற்கான இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தை கோடையில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News March 6, 2025
மாணவனை காப்பாற்ற போய், உயிரை விட்ட ஆசிரியர்

ஓசூர் அருகே நீரில் மூழ்கிய 3 ஆம் வகுப்பு மாணவரை காப்பாற்றச் சென்ற தலைமையாசிரியரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விளைநிலத்தில் பள்ளம் தோண்டி தண்ணீர் சேமிக்கப்பட்டிருந்தது. இதில் 3 ஆம் வகுப்பு மாணவர் நித்தின் தவறி விழ, அவரை காப்பாற்றச் சென்ற தலைமையாசிரியர் கெளரிசங்கரும் நீரில் மூழ்கி தத்தளித்தார். பக்கத்தில் யாரும் இல்லாததால் நீரில் தத்தளித்தபடி 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
News March 6, 2025
தினமும் பீர் குடிப்பவரா நீங்கள்?

மது அளவாக தான் குடிப்பேன் என சொல்பவர்களுக்கு கூட உடலில் சிறு பிரச்சனைகள் வரும். சிலர் பீர் அடித்தால் எந்த பிரச்னையும் வராது என கூறுவதை கேட்க முடியும். ஆனால் தினமும் 2 பீர் குடித்ததால் மூளை 10 ஆண்டுகள் முதிர்ச்சியடையும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல் துரித உணவுகளும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது. ஒருநாளைக்கு எத்தனை பீர் நீங்க அடிக்குறீங்க?