News September 18, 2025
விளையாட்டில் அரசியல் உணர்வை கலக்கின்றனர்: PCB

Asia Cup லீக் சுற்றில் பாக்., உடனான வெற்றியை, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் சமர்பிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறினார். இது விளையாட்டு களத்தில் அரசியலை கலப்பது, விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்று பாக்., கிரிக்கெட் வாரியம் (PCB) குற்றஞ்சாட்டியுள்ளது. இதனிடையே, இரு அணிகளும் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
Similar News
News September 18, 2025
RAC டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்வது எப்படி?

ரயில் புறப்பட்ட 1 மணி நேரத்திற்குள் TTE, உங்களுக்கான இருக்கையை நியமித்து தர வேண்டும் என்ற விதி உள்ளது. *முதலில் TTE-ஐ தொடர்புகொண்டு, காலியாகவுள்ள இருக்கையை ஒதுக்கி தருமாறு முறையிடுங்கள். *Chart தயாரான பிறகு, IRCTC செயலியில் ‘Chart Vacancy’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். *ரயில் எண்ணை உள்ளிட்டால், நீங்கள் செல்லும் ரயிலிலுள்ள காலி இருக்கைகள் காட்டும். *அதை TTE-யிடம் தெரிவித்தும் முறையிடலாம்.
News September 18, 2025
சருமம் பளபளக்க உதவும் ஜூஸ்

பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறி சாறுகள் சருமத்தின் பொலிவை அதிகரிக்கின்றன. அவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. அவை என்ன ஜூஸ் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க. மேலும், வேறு ஏதேனும் பழம் அல்லது காய்கறி உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 18, 2025
பாக் – சவுதி ஒப்பந்தம்: அலர்ட் மோடில் இந்தியா

<<17745829>>பாகிஸ்தான்- சவுதி <<>>அரேபியா இடையே பரஸ்பர பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதன்படி ஒருவர் தாக்கப்பட்டால், மற்றொருவர் உதவிக்கு செல்ல வேண்டும். இந்நிலையில், தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலை அடிப்படையில், நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அனைத்து வழிகளிலும் நாட்டின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதியுடன் செயல்படுவதாக கூறியுள்ளது.