News March 16, 2024
அரசியல் கட்சி விளம்பரங்கள் அதிரடியாக அகற்றம்

நாடாளுமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் பொது இடங்களில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் சார்ந்த சுவரொட்டிகள் சுவர் விளம்பரங்களை அனைத்து இடங்களிலும் அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது.
Similar News
News January 17, 2026
மதுரை: கார் மோதி காவலாளி பரிதாப பலி

கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த ராமராஜ் (65), தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் பணியை முடித்து பைக்கில் வீட்டுக்கு வந்தபோது, பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ராமராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 17, 2026
மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின்..

அலங்காநல்லூரில் இன்று (ஜன.17) நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு மதுரை விமான நிலையம் வரவுள்ளார். அதனைத் தொடர்ந்து 10 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இம்மானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை திறந்து வைக்க சாலை மார்க்கமாக செல்கிறார். பின் மதியம் 2 மணிக்கு மீண்டும் விமானநிலையம் வந்து அங்கிருந்து சென்னை செல்கிறார்.
News January 17, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (16.01.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


