News April 13, 2024

யூட்யூபர்களை குறிவைக்கும் அரசியல் கட்சிகள்

image

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், திமுக, அதிமுக, பாஜக என மூன்று பெரும் கட்சிகளும் நட்சத்திர பேச்சாளர்களின் பிரசாரத்துடன் நிறுத்திவிடாமல், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு பணத்தை வாரி செலவழித்து வருகின்றன. அத்துடன், முக்கிய யூட்யூபர்களிடம் ஆதரவாக கருத்து தெரிவிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News January 24, 2026

திண்டிவனம் மாவட்டத்தை உருவாக்குக: ரவிக்குமார்

image

விருத்தாசலம், செய்யாறு, பொள்ளாச்சி, ஆத்தூர், கும்பகோணம் ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு புதிதாக<<18938284>> 5 மாவட்டங்கள்<<>> அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், திண்டிவனம், செஞ்சி, மயிலம் சட்டமன்றத் தொகுதிகளை இணைத்து திண்டிவனத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று CM ஸ்டாலினுக்கு விசிக MP ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

News January 24, 2026

கூட்டணியில் இணைந்தவுடன் டிடிவி அதிர்ச்சி அறிவிப்பு

image

NDA கூட்டணியில் இணைந்த இரண்டே நாளில் அமமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை TTV தினகரன் வெளியிட்டுள்ளார். முழு மனதுடனேயே NDA கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். இதனால், அமமுக முக்கிய தலைவர்கள் மட்டும் 2026 தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும், TTV ராஜ்யசபா எம்பியாக தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

News January 24, 2026

அதானி வசமான IANS செய்தி நிறுவனம்

image

அதானி குழுமத்தின் ஆதிக்கம் நியூஸ் மீடியாவிலும் அதிகரித்துள்ளது. 2023-ல் பிரபல செய்தி நிறுவனமான IANS-ன் 50.50% பங்குகளை வாங்கிய அதானியின் மீடியா நிறுவனமான AMG மீடியா, 2024-ல் 76% பங்குகளை கைப்பற்றியது. தற்போது IANS நிறுவனத்தின் 100% பங்குகளுமே AMG மீடியா வசம் சென்றுவிட்டது. ஏற்கெனவே NDTV, Quint போன்ற செய்தி நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளும் அதானி குரூப்பிடமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!