News October 5, 2025

பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் கட்சிகள்: RN ரவி

image

நாட்டின் பல இடங்களில் சாதிய ஏற்றத்தாழ்வு இருந்தாலும் படித்தவர்கள் அதிகம் கொண்ட தமிழகத்திலும் அது இருப்பது கவலை அளிப்பதாக கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். பிரிவினையை ஏற்படுத்தும் பிரித்தாளும் முயற்சிகளில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், தமிழ்நாடு போராடி வெல்லும் என CM ஸ்டாலின் சொல்வதாக குறிப்பிட்ட அவர், யாருடன் போராடுகிறது என தெரியவில்லை என்றார்.

Similar News

News October 5, 2025

சற்றுமுன்: முடிவை மாற்றினார் விஜய்

image

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக சார்பில் தலா ₹20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குடும்பத்தினரை நேரில் சந்தித்து வழங்க விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. தற்போது திடீர் மாற்றமாக, பாதிக்கப்பட்டோரின் வங்கி கணக்கில் பணம் செலுத்த விஜய் திட்டமிட்டுள்ளராம். இதனையடுத்து, மக்களை அவர் நேரில் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

News October 5, 2025

கரூர் துயரத்துக்கு யார் காரணம்? காஜலின் பதில்

image

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். விஜய், அஜித் உள்பட பல முன்னணி நடிகர்களோடு நடித்தவர். இந்நிலையில், கடைத்திறப்பு விழாவில் பங்கேற்ற அவரிடம் கரூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தனிப்பட்ட முறையில் நான் விஜய்யின் ரசிகை என கூறிய அவர், அரசியல் பேரணி குறித்து நான் என்ன பேசுவது, அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News October 5, 2025

நவ.22-க்குள் பிஹார் தேர்தல்

image

பிஹார் தேர்தலில் 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறைகள், இனி அனைத்து தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், பிஹார் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளும் ஆன்லைனில் கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நவ.22-க்குள் பிஹாரில் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!