News February 25, 2025

Political Miracle: ரஷ்யாவிற்கு ஆதரவாக நின்ற USA!

image

உக்ரைன் போரை நிறுத்தவும், ரஷ்யாவை கண்டிக்கவும் ஐரோப்பிய நாடுகள் ஐநாவில் தீர்மானம் கொண்டு வந்தது. இதில், ரஷ்யாவிற்கு ஆதரவாக USA வாக்களித்துள்ளது. முந்தைய காலகட்டங்களில் உக்ரைனுக்கு ஆதரவாக நின்ற USA, தற்போது ரஷ்யா பக்கம் சாய்ந்துள்ளது. இந்த தீர்மானத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்க மறுத்துவிட்டன. USAன் செயல்பாடு உலக அரசியலில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் என கருதப்படுகிறது.

Similar News

News March 3, 2026

துபாயில் சிக்கி தவிக்கும் தமிழ் நடிகர்

image

வளைகுடா நாடுகளை ஈரான் தாக்குவதால், அங்கு கல்வி, பணிக்காக சென்ற தமிழர்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்களும் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில், துபாயில் மாட்டிக் கொண்டுள்ள நடிகர் வசந்த் ரவி தனது SM-ல், எதிர்பாராதவிதமாக துபாயில் கூடுதல் நாள்கள் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார். போர் சூழலால் இதயம் கனத்து போயிருப்பதாகவும், இத்தருணத்தில் அமைதிக்காக பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News March 3, 2026

மார்ச் 3: வரலாற்றில் இன்று

image

*உலக வனவிலங்கு நாள் *1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிப்பு *1940 – வரலாற்றாய்வாளர் கடம்பி மீனாட்சி நினைவு நாள் *1941 – ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பிறந்தநாள் *1944 – பாடகர் ஜெயச்சந்திரன் பிறந்தநாள் *1985 – நடிகை வரலட்சுமி சரத்குமார் பிறந்தநாள் *2011 – விண்வெளி அறிவியலாளர் வெங்கடராமன் ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

News March 3, 2026

கமேனியின் பேத்தியும் உயிரிழப்பு (PHOTO)

image

இஸ்ரேல், USA நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கமேனி, அவரது மகள், மருமகன் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், கமேனியின் ஒன்றரை வயது பேத்தி ஜஹ்ரா முகமதியின் போட்டோ SM-ல் வைரலாகி வருகிறது. உலகில் உதிர்ந்த கொஞ்ச நாள்களிலேயே எந்தவித தவறும் செய்யாத அந்த குழந்தை இறந்தது வருத்தமளிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். முன்னதாக, கமேனி தங்கியிருந்த பகுதியில் 30 ஏவுகணைகள் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!