News November 19, 2024

அரசியல் களம் மாறும்: கே.பி.முனுசாமி

image

2026 தேர்தல் அதிமுகவினருக்கு வாழ்வா, சாவா போன்றது என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறாவிட்டால் அரசியல் களம் மாறும் என்றும், சிறிய கட்சிகள் மேலே வரும் எனவும் கூறியுள்ளார். அதிமுக கள ஆய்வுக் குழு கூட்டத்தில் பேசி வரும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், <<14652242>>அதிமுகவின் இன்றைய நிலை<<>> குறித்து தங்களது ஆதங்கத்தையும், அச்சத்தையும் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 18, 2026

அறிவித்தார் ராணிப்பேட்டை ஆட்சியர்!

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் துப்பாக்கி வைத்திருப்போர் வெளியில் எடுத்துச் செல்லவும், வீட்டில் வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஒரு வாரத்துக்கு பின்னர் துப்பாக்கிகளை திரும்ப பெறலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News March 18, 2026

வெங்காயம் வாங்கும்போது இதை மறக்காதீங்க!

image

விலை குறைந்துள்ளது என்பதால் காய்கறிகளை வாங்கிக் குவிக்கிறீர்களா? அப்படியெனில், வெங்காயம் வாங்கும்முன் இந்த அனுபவ டிப்ஸை கவனியுங்கள். அதாவது பெரிய வெங்காயத்தை வாங்கும்போது சின்னதாக பார்த்து வாங்குங்கள். அதில் தான் சத்தும் உணவில் ருசியும் நன்றாக இருக்கும். சின்ன வெங்காயத்தை பெரிதாக பார்த்து வாங்குங்கள். அதை நறுக்கி சமைக்கும்போது உணவிலும் அதன் ருசி எதிரொலிக்கும். நீங்க எப்படி வெங்காயம் வாங்குவீங்க?

News March 18, 2026

₹6,500, ₹11,000.. புதிய அறிவிப்பு வந்தது

image

வேட்பாளர்கள் செய்யும் ஒவ்வொரு செலவுக்கும் வரம்பு நிர்ணயித்து, புதிய விலை பட்டியலை ECI வெளியிட்டுள்ளது. பிளாஸ்டிக் சேர் ₹11, குஷன் இருக்கை ₹165, வாழை குலை நட்டால் ஒன்றுக்கு ₹750, ஆயிரம் வாலா பட்டாசு வெடித்தால் ₹650, மேள தாளங்கள் வாசித்தால் ₹6,500, மயிலாட்டம் ₹11,000, சிறிய தண்ணீர் பாட்டிலுக்கு ₹7, வெஜிடபிள் ரைஸ் ₹50, வெரைட்டி ரைஸ் ₹50, சிக்கன் பிரியாணி ₹110, மட்டன் பிரியாணி ₹180.

error: Content is protected !!