News May 4, 2024
மே.வங்க ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு போலீஸ் சம்மன்

ஆளுநர் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த மேற்கு வங்க ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 4 பேருக்கு, அந்த மாநில காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீது, அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் ஆஜராகும்படி, ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Similar News
News August 30, 2025
BREAKING: செப்டம்பர் முதல் ₹2,500.. CM ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ₹2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அதன்படி, செப்டம்பர் 1-ம் தேதி நெல் கொள்முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இனி சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ₹2,545-க்கு கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம், லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவர். SHARE IT.
News August 30, 2025
பரோட்டா + பீஃப்.. நூதன போராட்டம்

கொச்சியில் உள்ள கனரா வங்கி வளாக கேண்டீனில் பீஃப் விற்கவோ, சாப்பிடவோ கூடாது என மேலாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கியின் எதிரே பரோட்டா, பீஃப் சாப்பிடும் நூதன போராட்டத்தை Beef Fest., ஆக ஊழியர்கள் நடத்தியுள்ளனர். அந்த மேலாளர் பிஹாரைச் சேர்ந்தவர் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News August 30, 2025
திமுகவில் பனிப்போர்.. அமைச்சர்களுக்குள் சண்டை?

சென்னை மாநகராட்சியில் அதிகாரிகளை நிர்வகிக்கும் விஷயத்தில், அமைச்சர்கள் நேருவுக்கும், சேகர்பாபுவுக்கு மோதல் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை சரியாக கையாளவில்லை என அதிகாரிகளிடம் நேரு கரார் காட்டியிருக்கிறார். அதற்கு, சேகர்பாபுவை கலந்தாலோசித்த பின்னரே, ஏதும் செய்ய முடியும் என்று பதில் வந்ததால் அமைச்சர்களுக்கு இடையே பனிப்போர் பெரிதாகி வருவதாக பேசப்படுகிறது.