News February 25, 2025
நேரில் ஆஜராக சீமானுக்கு போலீஸ் சம்மன்

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சீமானுக்கு அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வாரத்துக்குள் வழக்கை முடித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Similar News
News February 25, 2025
காலை 1 கிளாஸ் கற்றாழை ஜூஸ்; இவ்வளவு நன்மைகளா..?

*காற்றாழையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும் *சிறிதளவு எலுமிச்சை சாறை கற்றாழை ஜூஸில் கலந்து குடித்தால், எடை இழப்புக்கு பெரிதும் உதவுமாம் *கற்றாழை சாறுடன் நெல்லிக்காயும் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் முடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் மாறும் *வாய் புண்கள் விரட்ட, கற்றாழை ஜூஸில் இருக்கும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உதவும்.
News February 25, 2025
BREAKING: வங்கக்கடலில் திடீர் நிலநடுக்கம்

கொல்கத்தா அருகே வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்திற்கும் இந்தியாவின் கொல்கத்தா, புவனேஸ்வர் இடையே வங்கக்கடல் நடுவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
News February 25, 2025
2 நாட்களுக்கு கனமழை: IMD

நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுநாள் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. 28ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியிலும், 1ஆம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரத்திலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் IMD கூறியுள்ளது.