News April 14, 2024
நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன்

நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி, நெல்லை சென்ற விரைவு ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ப்ளூ டைமண்ட் ஓட்டல் மேலாளர் சதீஷ் உள்ளிட்ட மூவர் கைதாகினர். இதையடுத்து அவர்களது வாக்குமூலம் அடிப்படையில் போலீசார் தற்போது சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 11, 2026
ராணிப்பேட்டையில் கேஸ் புக் பண்ண புது வழி!

ராணிப்பேட்டை மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News January 11, 2026
தேர்தலுக்கு பிறகே அதிகார பங்கு பற்றி தெரியும்: சண்முகம்

திமுக கூட்டணிக்கு சில கட்சிகள் வர இருப்பதால், சீட் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக CPM சண்முகம் தெரிவித்துள்ளார். கண்டிப்பாக இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம் என்ற அவர், தேர்தலுக்கு பிறகு ‘ஆட்சியில் பங்கு’ என்ற சூழல் குறித்து முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். மேலும், NDA கூட்டணியை தோற்கடிக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 11, 2026
பிரபல நடிகர் மாரடைப்பால் காலமானார்

பிரபல பாடகரும், நடிகருமான பிரஷாந்த் தமாங் (43) மாரடைப்பால் காலமானார். 1983-ல் பிறந்த இவர், தனது தந்தை மறைந்த பிறகு கொல்கத்தா போலீசில் கான்ஸ்டபிளாக பணிக்கு சேர்ந்தார். ஆனாலும், இசை மீதிருந்த அதீத ஆர்வத்தால் ஆர்கெஸ்ட்ராகளில் பாடத் தொடங்கினார். பிறகு 2009-ல் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த இவர், பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த Paatal Lok ஹிந்தி சீரிஸில் நடித்திருந்தார். #RIP


