News June 2, 2024
பிரஜ்வால் வழக்கில் ஆப்பிள் உதவியை நாடும் காவல்துறை

கர்நாடக எம்பி பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் வழக்கில், அவர் மீதான குற்றத்தை நிரூபிக்க ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை சிறப்பு புலனாய்வுக் குழு நாடவுள்ளது. புகாருக்கு உள்ளான ஆபாச வீடியோக்கள் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஐபோனில் எடுக்கப்பட்டவை என காவல்துறை நம்புகிறது. ஆனால், தனது ஃபோன் தொலைந்து விட்டதாக அவர் கூறியதால், அந்த தகவல்கள் ஐகிளவுட்டில் சேமிக்கப்பட்டுள்ளதா? என காவல்துறை விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
Similar News
News September 10, 2025
TikTok வீடியோ பண்ண யூனிவர்சிடி படிப்பா?

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சோஷியல் மீடியாக்களின் தாக்கத்தால், கல்வி நிறுவனங்களில் அது ஒரு படிப்பாகவே கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், USA பல்கலைகளில் ‘TikTok Classes’ என்ற படிப்பே நடத்தப்படுகிறது. இந்த பாடத்திட்டத்தில் TikTok Trends, Content creation, Influencer Marketing, Strategic Planning, Online Marketing உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன. நம்மூரிலும் கூட FB, Insta-வுக்கு படிப்புகள் வரலாம்.
News September 10, 2025
செங்கோட்டையனுடன் கைகோர்த்த OPS தரப்பு

EPS-க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள செங்கோட்டையன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இந்த சூழலில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள இல்லத்தில் செங்கோட்டையனை ஓபிஎஸ் தரப்பினர் சந்தித்து பேசி வருகின்றனர். இது அரசியலில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது. இதனையடுத்து, டிடிவி, ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News September 10, 2025
சொந்தமா இடம் வாங்குவதற்கு முன் இது முக்கியம்

சொந்தமாக வீட்டு மனை வாங்குவது என்பது பலரின் கனவு. அப்படிப்பட்ட கனவை நனவாக்கும்போது, சில விஷயங்களில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மனை வாங்குவதற்கு முன் நீங்க கவனம் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னவென்பதை தொகுத்து வழங்கியுள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை Swipe செய்து தகவல்களை பாருங்கள். SHARE IT.