News August 17, 2024

ராம பக்தருக்கு சல்யூட் அடித்த போலீஸ்

image

நாட்டிலேயே, உத்தரப்பிரதேசத்தில் தான் ராம பக்தர்கள் அதிகம். அதனை நிரூபிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் Photo ஒன்று வைரலாகியுள்ளது. அதில், அயோத்தி காவல் நிலைய அதிகாரி அமரும் இருக்கையில், ராம பக்தரான குரங்கு ஒன்று உள்ளது. அதைப் பார்த்த போலீஸ் அதிகாரி, அதனை விரட்டுவதற்கு பதில், சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியுள்ளார். இந்த சம்பவத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Similar News

News January 10, 2026

வரலாற்றில் இன்று

image

*1863 – உலகின் முதல் நிலத்தடி ரயில் சேவை லண்டனில் தொடங்கியது.
*1917 – பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு வெள்ளை மாளிகைக்கு எதிராக போராட்டம் தொடங்கியது.
*1962 – பெருவில் சுழன்றடித்த சூறாவளியில் 4,000 பேர் பலியாகினர்.
*1974 – பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் பிறந்ததினம்
*1990 – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்ததினம்

News January 10, 2026

விஜய் படம் எப்போ வந்தாலும் கொண்டாட்டம்தான்: SK

image

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போனது எதிர்பாராத ஒன்று என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். விஜய் படம் எப்போது வெளியானாலும் அன்றைய தினம் கொண்டாட்டம்தான் என்றும் ‘ஜனநாயகன்’ சென்சார் பிரச்னை கோர்ட்டில் இருப்பதால் அதுகுறித்து பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார். மேலும் சென்சாரில் என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாது என்றவர், படம்‌பார்க்கும் உறுப்பினர்களின் கருத்தை பொறுத்து மாறுபடும் என குறிப்பிட்டார்.

News January 10, 2026

ஸ்லீப்பர் பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

image

ஸ்லீப்பர் பஸ்களில் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருவதை அடுத்து, மத்திய அரசு புதிய விதிகளை விதித்துள்ளது. அதன்படி இனிமேல், ஸ்லீப்பர் பஸ்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் (அ) மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் மட்டுமே உருவாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார். பஸ்களில் அனைத்து வகையான பாதுகாப்பு உபகரணங்களும் பொருத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!