News February 25, 2025
போலீஸ் வேலை.. கல்வித் தகுதியை உயர்த்த பரிந்துரை

தமிழக காவல்துறையில் கான்ஸ்டபிள்களாக சேர தற்போது குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி உள்ளது. இந்நிலையில், தமிழக காவல்துறை 5ஆவது ஆணையம் CM ஸ்டாலினிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில் குறைந்தபட்ச கல்வியை 12ஆம் வகுப்பு தேர்ச்சியாக அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது. மேலும், கான்ஸ்டபிள் வேலைக்கு ஆள் எடுக்கையில் 20% தமிழ் மீடியத்தில் படித்தோரை தேர்வு செய்யும்படியும் பரிந்துரைத்துள்ளது.
Similar News
News February 25, 2025
காற்று மாசு: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

உலகில் மிக மோசமாக காற்று மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தை பிடித்துள்ளது. 2024ல் அதிக மாசடைந்த நாடுகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. காற்றின் தரக் குறியீடு (AQI) அடிப்படையில் முதல் 10 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டன. அதில் 140 AQI கொண்ட நாடாக வங்கதேசம் முதலிடம் பிடித்துள்ளது. 115 AQIயுடன் 2ம் இடத்தில் பாகிஸ்தானும், 111 AQIயுடன் 3ம் இடத்தில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளன.
News February 25, 2025
நடிகை ரஞ்சனா நாச்சியார் பாஜகவிலிருந்து விலகல்

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவின் கலை மற்றும் கலாசாரப் பிரிவு மாநிலச் செயலாளர் ரஞ்சனா நாச்சியார் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இவர் தான், சில மாதங்களுக்கு முன்பு பஸ்ஸில் ஃபுட் போர்ட் அடித்த மாணவர்களை பொதுவெளியில் ‘பளார்’ என அறைந்தவர். சினிமா துணை நடிகையாகவும் இருக்கும் இவர், ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார்.
News February 25, 2025
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: இபிஎஸ் கண்டனம்

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார். திமுக அரசு, நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். அர்ஜுனனின் கட்சிப் பணியை தடுக்கும் சோதனை வெட்கக்கேடானது என்றும் விமர்சித்துள்ளார்.