News March 26, 2025

காவல், தீயணைப்பு நிலையங்கள்: CM பதில்

image

TNல் புதிய காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில், எம்எல்ஏக்கள் பலர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்டாலின், கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு சாத்தியக்கூறு இருக்கும் இடங்களில் புதிதாக காவல், தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என உறுதியளித்தார். காவல்துறை மானியக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறினார்.

Similar News

News December 6, 2025

உலக சாதனை படைத்த நிதிஷ் குமார்

image

உலக சாதனை புத்தகத்தில் (லண்டன்) பிஹார் CM நிதிஷ் குமார் இடம்பிடித்துள்ளார். பிஹார் தேர்தலில் வெற்றிபெற்று, அவர் 10-வது முறையாக முதல்வராக பதவியேற்றதை அங்கீகரித்து அவரது பெயர் உலக சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டணியில் கருத்து வேறுபாடு காரணமாக அவர், பலமுறை ராஜிநாமா செய்திருந்தாலும் மீண்டும் RJD அல்லது BJP உடன் கூட்டணி அமைத்து CM அரியணையில் அமர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 6, 2025

ICC விருது: ஷபாலி வர்மாவுக்கு கிடைக்குமா?

image

ICC-யின் நவம்பர் மாத சிறந்த வீராங்கனைக்கான விருது பட்டியலில் ஷபாலி வர்மா இடம்பெற்றுள்ளார். மகளிர் உலகக் கோப்பை தொடரில் அவர் 2 போட்டிகளில் விளையாடி இருந்தாலும், இறுதிப்போட்டியில் 87 ரன்கள் குவித்ததுடன் 2 விக்கெட்களும் வீழ்த்தி இந்தியா மகுடம் சுடுவதற்கு உதவினார். இப்பட்டியலில் தாய்லாந்தின் புத்தவோங், UAE-ன் ஈஷா ஒசாவும் உள்ளனர். எனினும், ஷபாலிக்கே விருது கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

News December 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை
▶குறள் எண்: 541
▶குறள்:
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
▶பொருள்: குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

error: Content is protected !!