News March 21, 2024
பிரபல நடிகைக்கு எதிராக போலீசில் புகார்

சுந்தரா டிராவல்ஸ் நாயகி ராதா, இளைஞரை கடுமையாகத் தாக்கியதாக போலீசில் ஒருவர் புகார் அளித்துள்ளார். சாலிகிராமத்தை சேர்ந்த ரிச்சர்ட், ராதாவை கிண்டல் செய்ததாகவும், ராதா வீட்டிலுள்ள சிசிடிவி கேமராவை ரிச்சர்டின் உறவினர் உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்நிலையத்தில் ராதா புகார் அளித்தநிலையில், ரிச்சர்டை, ராதாவும், அவரின் மகனும் தாக்கியதாக ரிச்சர்டின் தந்தை புகார் அளித்துள்ளார்.
Similar News
News February 6, 2026
சற்றுமுன்: தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து இறக்கத்திலேயே நீடிக்கிறது. 1 அவுன்ஸ்(28g) 50 டாலர்கள் வரை குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால், நாளையும் தங்கம் விலை கணிசமாக குறையும். சர்வதேச சந்தையில் நிலவும் சூழலால் நம்மூரில் தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 29-ம் தேதி சவரன் ₹1,34,400-க்கு விற்பனையான தங்கம், இன்று ₹1,12,960-க்கு விற்பனையாகிறது. அதாவது சவரனுக்கு ₹21,440 குறைந்துள்ளது.
News February 6, 2026
புளுகு மூட்டை திமுக: EPS

களத்திற்கு வந்து ஸ்டாலின் ஓட்டு கேட்டால் அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல, வெறும் 0 தான் என EPS கூறியுள்ளார். மத்திய அரசு போதிய நிதியை வழங்கவில்லை என மக்களுக்கு திமுக அல்வா கொடுக்கிறது என்ற அவர், ரயில்வே திட்டங்கள் வரவில்லை என புளுகு மூட்டைகளை அரசு அவிழ்த்து விடுவதாகவும் பேசியுள்ளார். மேலும், தான் வகிக்கும் பதவிக்கு உள்ள கௌரவம், மரியாதையை CM எண்ணிப்பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
ஹீமோகுளோபின் அதிகரிக்க இத குடிங்க போதும்!

ஹீமோகுளோபின் ரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட்டால், ரத்த சோகை பிரச்னை ஏற்படலாம். ஆதலால், உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, டாக்டர்கள் சில எளிய ஜூஸ்களை பரிந்துரைக்கின்றனர். அவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பாருங்கள். உங்களின் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


