News August 12, 2024

நடிகர் ரஞ்சித் மீது போலீசில் புகார்

image

நடிகர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விசிக வன்னியரசு புகார் அளித்துள்ளார். ரஞ்சித் நடித்துள்ள ‘கவுண்டம்பாளையம்’ படம் சமீபத்தில் ரிலீசானது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், ஆணவக் கொலைகளை ஆதரித்து அவர் பேசியதாக வன்னியரசு குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அவரது பேச்சு சமுதாயத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் உள்ளதாகவும் தனது புகாரில் அவர் கூறியுள்ளார்.

Similar News

News March 5, 2026

சென்னை HC-ன் புதிய தலைமை நீதிபதி இவர்தான்

image

சென்னை HC-ன் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில் சுஷ்ருத் சென்னை HC-க்கு மாற்றப்பட்டுள்ளார். 1966-ல் ராய்பூரில் பிறந்த இவர், மத்தியப்பிரதேச HC-ல் 24 ஆண்டுகள் (1992 முதல்) வழக்கறிஞராக இருந்தார். 2018-ல் மத்தியப்பிரதேச HCன் நிரந்தர நீதிபதியாகி, 2025-ல் கேரள HC-ன் நீதிபதியாக மாற்றப்பட்டார்.

News March 5, 2026

கருணாநிதி டூ இன்பன் வரை.. ஸ்டாலின் பேச்சு

image

அன்பில் மகேஸ் இல்ல திருமண நிகழ்வில் ஸ்டாலின் பேசியது வைரலாகிறது. அதில், அன்பில், கடைசி வரை கருணாநிதிக்கு பக்கபலமாக இருந்தார். தொடர்ந்து -அன்பில் பொய்யாமொழி தனக்கும், தற்போது அன்பில் மகேஸ், உதயநிதிக்கும் பக்கபலமாக உள்ளதாக ஸ்டாலின் கூறினார். மேலும், இந்த குடும்ப நட்பு, மகேஸ், உதயநிதியுடன் முடியப்போவதில்லை. அவர்களுடைய மகன்கள் இன்பன், இனியன் என வாழையடி வாழையாக தொடர்கிறது என்றும் தெரிவித்தார்.

News March 5, 2026

விசிகவை வைத்து விஜய் வாக்குகளுக்கு இலக்கா?

image

விசிகவுக்கு சென்னையில் தொகுதிகள் ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயிலாப்பூர், வேளச்சேரி, பெரம்பூர் தொகுதிகள் லிஸ்ட்டில் உள்ளதாம். விஜய் போட்டியிடும் தொகுதி & அங்கு பிரியும் சிறுபான்மையினர் & தலித் வாக்குகளை சிதற விடாமல் பெறவே இந்த முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, 2021 தேர்தலில் சென்னையில் தொகுதிகள் கேட்டும் விசிகவுக்கு வழங்கப்படவில்லை.

error: Content is protected !!