News August 4, 2024

உள் ஒதுக்கீடு தீர்ப்புக்குள் விஷம்: ரவிக்குமார்

image

சாதி ரீதியான உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்குள் விஷம் இருப்பதாக விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சித்திருக்கிறார். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை வரவேற்கும் அவர், உள் ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்குத் தருவது எஸ்சி மக்களுக்குப் பேராபத்தாக முடியும் என்றும் கூறியிருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன என்று கமென்ட்டில் சொல்லுங்க

Similar News

News January 14, 2026

சிப்ஸ் பாக்கெட் பொம்மை வெடித்து பார்வை இழப்பு!

image

சிப்ஸ் பாக்கெட்டில் வரும் பொம்மை வெடித்து குழந்தையின் கண்பார்வை பறிபோன துயர சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. 8 வயதான அன்கேஷ், சிப்ஸ் பாக்கெட்டில் வந்த பொம்மையை வைத்து சமையல் அறையில் விளையாடியுள்ளான். அப்போது, அந்த பொம்மை ஸ்டவ்வில் விழுந்து வெடித்ததால் கண்பார்வை பறிபோயுள்ளது. கடந்த மாதம் இதே மாநிலத்தில் சிப்ஸ் பாக்கெட் பொம்மையை விழுங்கி 4 வயது குழந்தை பலியானது. பெற்றோர்களே கவனம்.

News January 14, 2026

WPL வரலாற்றில் முதல் சம்பவம்!

image

மகளிர் பிரீமியர் லீக்கில் ரிட்டயர்டு அவுட் ஆன முதல் வீராங்கனையாக GG வீராங்கனை ஆயுஷ் சோனி உருவெடுத்துள்ளார். நேற்றைய MI-க்கு எதிரான போட்டியில் 6-வதாக களமிறங்கிய அவர், 14 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே அடித்தார். பெரிய ஷாட்களை அடிக்க முடியாததால் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேற்றப்பட்டு பார்தி ஃபுல்மாலி களமிறக்கப்பட்டார். ஃபுல்மாலி 15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி 36 ரன்களை எடுத்தார்.

News January 14, 2026

RCB வீரரின் அணியில் கோலிக்கு இடமில்லை!

image

RCB விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா, தனது ஃபேவரைட் ஐபிஎல் அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால், அதில் கோலி இடம்பெறாதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஜிதேஷ் சர்மாவின் அணியின் தோனி கேப்டனாக உள்ளார். அதேபோல் ரோஹித், கில்கிறிஸ்ட், சூர்யகுமார் யாதவ், ஜேக்ஸ் காலிஸ், டிவில்லியர்ஸ், பும்ரா, ஹேசல்வுட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

error: Content is protected !!