News April 7, 2025
சிறுமியிடம் சில்மிஷம்: பிரபல மத போதகர் மீது போக்சோ

மேடைகளில் ஆடிப்பாடி கிறிஸ்தவ மதம் குறித்து போதனை செய்யும் ஜான் ஜெபராஜ் ஞாபகம் இருக்கிறதா? இவர்தான் தற்போது போக்சோ வழக்கில் சிக்கியிருக்கிறார். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அவர் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவரைத் தேட தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News April 12, 2025
ஜெர்சியை மாற்றும் ஆர்சிபி அணி..!

சிவப்பு நிற ஜெர்சியில் விளையாடிவரும் ஆர்சிபி அணி, ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடும். மரம் நடுதல், புவி வெப்பமயமாதலை குறைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். அந்த வகையில் நாளை (ஏப். 13) ராஜஸ்தான் உடனான போட்டியில் பச்சை நிற ஜெர்சியில் பெங்களூரு விளையாட உள்ளது. நடப்பு சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி அந்த அணி மூன்றில் வென்றுள்ளது.
News April 12, 2025
அண்ணாமலைக்கு தேசிய பாஜகவில் புதிய பதவி..!

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அவர் விடைபெற்றதை அடுத்து, புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹெச். ராஜா, கரு நாகராஜன், சரத் குமார், வானதி, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கியுள்ளதாக கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.
News April 12, 2025
பாஜக தலைவர் பதவியிலிருந்து விடை பெற்றார் அண்ணாமலை

TN பாஜக தலைவராக எல்.முருகனுக்கு பிறகு அண்ணாமலை 2021-ல் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளுக்கும் மேல் அப்பதவியில் அவர் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியானபடி இருந்தது. அண்மையில் டெல்லியில் பாஜக தலைவர்களை இபிஎஸ் சந்தித்தபிறகு இது உறுதியானது. புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வானதால், அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து அண்ணாமலை விடை பெற்றார்.