News April 15, 2025
போக்சோ வழக்கு… பரபரப்பு தீர்ப்பு

15 வயது பெண், 22 வயது இளைஞரால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், மும்பை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. நவிமும்பையை சேர்ந்த சிறுமி, 2020-ல் இளைஞருடன் உபிக்கு சென்றவர், 10 மாதம் கழித்து கர்ப்பிணியாக வீடு திரும்பினார். இதனால், இளைஞர் மீது போக்சோ வழக்கு பாய, விசாரித்த கோர்ட், இச்சிறுமிக்கு தான் செய்வது என்னவென்று தெரியும், விரும்பியே சென்றுள்ளார் எனக் கூறி, இளைஞருக்கு ஜாமின் வழங்கியுள்ளது.
Similar News
News December 10, 2025
SIR படிவம் சமர்ப்பிக்க நாளையே கடைசி!

SIR படிவத்தை சமர்பிக்க நாளை, டிசம்பர் 11-ம் தேதியே கடைசி நாள். உடனே உங்கள் பகுதியின் BLO-வை அணுகி, படிவத்தை பூர்த்தி செய்து அவரிடம் சமர்ப்பியுங்கள். தமிழ்நாட்டில் இதுவரை 6.36 கோடி வாக்காளர்களின் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. உங்கள் படிவம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதா என அறிய <
News December 10, 2025
TN-ல் அடுத்த 100 நாள்களில் தேர்தல்: CV சண்முகம்

அதிமுகவை அழிக்க சில அரசியல் புரோக்கர்கள் முயற்சி செய்வதாக EX அமைச்சர் CV சண்முகம் விமர்சித்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் அடுத்த 100 நாள்களில் தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். மேலும், உறவாடி கெடுப்பவர்களிடம் அதிமுகவினர் உஷாராக இருக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், நேரடி எதிரிகள், மறைமுக துரோகிகளுக்கு வரும் தேர்தலில் நிச்சயம் பாடம் புகட்டப்படும் என சூளுரைத்தார்.
News December 10, 2025
புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2026-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ₹750 மதிப்பில் 4 கிலோ பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை, பாசிப்பருப்பு, 300 கிராம் நெய், 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பு வரும் 3-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பை CM ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார்.


