News September 2, 2025
இந்தியா வந்ததும் PM போட்ட போன் கால்

பஞ்சாபில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், ஜப்பான், சீனா சென்றுவிட்டு தாயகம் திரும்பிய PM மோடி, பஞ்சாப் CM பகவந்த் மான் சிங் உடன் தொலைபேசியில் நிலவரம் குறித்து கேட்டுள்ளார். வெள்ள பாதிப்புகள், நிவாரணம், மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்த அவர், மத்திய அரசு துணை நிற்கும் என உறுதியளித்துள்ளார்.
Similar News
News September 2, 2025
விஜய்யுடன் கூட்டணியா? அதிகாரப்பூர்வ தகவல்

தவெகவுடன் ஓபிஎஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த OPS, ‘எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்றார். OPS-ன் இந்த பதில், அவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளதையும், NDA கூட்டணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனில், அவர் இந்த ஆப்ஷனுக்கு வருவார் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News September 2, 2025
கமல் அப்பவே அப்பிடி: லோகேஷ் ருசிகரம்

கமல்ஹாசன் எப்போதுமே தமிழ் சினிமாவை தொலைநோக்கு பார்வையுடன் பார்ப்பவர் என்ற கருத்து சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது உண்டு. இதனை ஆமோதிக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். சமீபத்திய பேட்டியில், 15 ஆண்டுகளுக்கு முன்பு OTT குறித்து பேசியவர் தான் கமல் என்றார். அப்போது நமக்கு OTT பற்றி தெரியாது. ஆனால், இப்போது OTT இல்லாமல் படமே ரிலீஸ் ஆகாது என்ற நிலையில் உள்ளோம் என்றார். உங்கள் கருத்து என்ன?
News September 2, 2025
மூளையைத் தின்னும் அமீபா: அரசு முக்கிய உத்தரவு

கேரளாவில் ஆகஸ்டில் மட்டும் மூளையைத் தின்னும் அமீபா பரவலால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னை, அதன் அண்டை மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சிமலை அடிவார மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நன்னீரில் உள்ள அமீபா பரவலால் இத்தொற்று ஏற்படும் என்பதால், மாநகராட்சி, நகராட்சி மற்றும் நட்சத்திர ஓட்டலில் உள்ள குளங்களை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.