News June 12, 2024
பிரதமரின் இத்தாலி பயணம்: காந்தி சிலை சேதம்

3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட மோடி, முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி செல்ல உள்ளார். நாளை (13ஆம் தேதி) தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ள, 50ஆவது ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிலையில், பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இத்தாலியின் அபுலியா பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலை, காலிஸ்தான் ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 12, 2025
திருத்தணி: ரகளை செய்த இளைஞருக்கு தர்ம அடி!

திருத்தணியில் நேற்று(நவம்பர் 11) மாலை சிவசக்தி நகர் பகுதியில் வட மாநில இளைஞர் செங்கற்களால் தாக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்றாய் இணைந்து அத்தகைய வடமாநில இளைஞனை பிடித்து, கட்டி வைத்து அடித்துள்ளனர். பொதுமக்களிடமிருந்து வட மாநில இளைஞரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
News November 12, 2025
குளிர்காலத்தில் இந்த கஷாயத்தை கட்டாயமா குடிங்க!

குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெற, சோம்பு கஷாயம் குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱தேவையானவை: சோம்பு, எலுமிச்சைச் சாறு ✱செய்முறை: தண்ணீரில் போட்டு, சோம்பை 5- 7 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு, அதனை வடிகட்டி, அதில் தேவைக்கேற்ப எலுமிச்சைச் சாற்றை சேர்த்து குடிக்கலாம். நண்பர்களுக்கும் இப்பதிவை ஷேர் பண்ணுங்க.
News November 12, 2025
ஏ.ஆர்.ரஹ்மானை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

பாலியல் வழக்கில் சிறை சென்று ஜாமினில் வந்த ஜானி மாஸ்டர், AR ரஹ்மான் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘பெடி’ படத்தில் இருவரும் ஒன்றாக பணியாற்றும் நிலையில், இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, பாலியல் வழக்கில் தொடர்புடையவருடன் ரஹ்மான் இணைந்து பணியாற்றுவது சரியா என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் கேள்வி எழுப்பியுள்ளனர்.


