News October 18, 2025

PM-ன் தீபாவளி பரிசு கொடுத்தாச்சு: FM நிர்மலா

image

GST வரிகுறைப்பால் அன்றாடம் பயன்படுத்தும் 54 பொருள்களின் விலை குறைந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். AC விற்பனை 2 மடங்காகவும், டிவி விற்பனை 30 – 35% வரை உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஃப்ரிட்ஜ் விற்பனையும் அதிகமானதாக குறிப்பிட்ட அவர், ஹீரோ மோட்டார்ஸின் விற்பனை வீதம் செப்டம்பரில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் PM-ன் தீபாவளி பரிசு வழங்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

Similar News

News October 18, 2025

Sports Roundup: வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை

image

*சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில், இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. *இஸ்தான்புல்லில் நடந்த சர்வதேச வாள்வீச்சு தொடரில் பவானி தேவி வெள்ளி வென்றார். உலக ஜூனியர் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் தான்வி சர்மா முன்னேற்றம். *ஆசிய மகளிர் 7’S ரக்பி சீரிஸில், இந்தியா 0-43 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானிடம் படுதோல்வி.

News October 18, 2025

பிறந்த குழந்தையை எப்போது தூளியில் போடணும்?

image

பிறந்த குழந்தையை தூங்க வைக்க காலங்காலமாக நாம் பயன்படுத்துவது தூளிதான். ஆனால், இதில் சில விஷயங்களை கவனிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். குழந்தை பிறந்து 2 வாரங்களுக்கு பின்பே தூளியில் போடவேண்டுமாம். மேலும், குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு பிறகு தூளி பயன்படுத்துவதை குறைப்பது நல்லதாம். குழந்தையை சீக்கிரம் தூங்க வைக்க தூளியை வேகமாக ஆட்டக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர். SHARE.

News October 18, 2025

இவர்களுக்கு தீபாவளி விடுமுறை இல்லை

image

தீபாவளியன்று டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு விடுமுறை இல்லை என்றும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய மருத்துவ அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அசம்பாவிதம் ஏற்பட்டால் dphei@nic.in என்ற மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!