News July 4, 2025
PMK கொறடா பொறுப்பிலிருந்து நீக்க முடியாது: MLA அருள்

பாமக கொறடா பொறுப்பிலிருந்து MLA அருளை மாற்ற வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டபேரவை செயலரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் G.K.மணி அனுமதியில்லாமல் பாமக கொறடா பொறுப்பில் இருந்து தன்னை நீக்க முடியாது என்றும், கொறடாவாக எம்.எல்.ஏ. அருளே தொடருவார் என GK மணி அளித்திருக்கக்கூடிய கடிதத்தை சபாநாயகரிடம் தான் வழங்கயுள்ளதாகவும் MLA அருள் தெரிவித்தார்.
Similar News
News July 4, 2025
14,582 காலியிடங்கள்… இன்றே கடைசி!

SSC ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகளுக்கு (CGL) விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மொத்தம் உள்ள 14,582 பணியிடங்களுக்கு இந்த தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பித்தபின் திருத்தங்களை ஜூலை 9-11 தேதிகளுக்குள் முடிக்க வேண்டும். ஆகஸ்ட் 13 முதல் 30 வரை Tier-1 தேர்வும், டிசம்பரில் Tier-2 தேர்வும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு <
News July 4, 2025
’பாபநாசம் படத்தில் ரஜினி நடிக்கயிருந்தது’: ஜித்து ஜோசப்

மலையாளத்தில் மிக ஹிட்டான படம் த்ரிஷ்யம். இது தமிழில் பாபநாசம் எனும் பெயரில் ரீமேக்கானது. இப்படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசப் சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஜினி இந்த படத்தை பார்த்துவிட்டு நடிக்க ஆர்வமாக இருந்தார், காவல்துறையினர் தன்னை தாக்கும் காட்சிகளை மக்கள் ஏற்பார்களா என்ற ஐயம் அவருக்கு இருந்ததாக தெரிவித்தார். ஆனால் கமல் படம் பார்த்தவுடன் சம்மதம் தெரிவித்துவிட்டார் எனவும் கூறினார்.
News July 4, 2025
BREAKING: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

ஈட்டிய விடுப்பில் 15 நாள்கள் வரை அக்.1 முதல் சரண் செய்து பணப் பயன் பெற்றுக்கொள்ளலாம் என TN அரசு அறிவித்துள்ளது. 2026-ம் ஆண்டு ஏப்.1 முதல் அமலாகும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே (அக்.1 முதல்) ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர். இதற்காக ஆண்டுக்கு ₹3,561 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.