News October 17, 2025

பேரவையிலேயே எதிரொலித்த பாமக பஞ்சாயத்து

image

சட்டப்பேரவையில் இருமல் சிரப் விவகாரத்தில் பாமக MLA அருளை பேச அனுமதித்ததற்கு, அன்புமணி தரப்பு MLA-க்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் அவையின் மாண்பு கெடுவதாக கூறிய சபாநாயகர், பாமக பஞ்சாயத்துகளை பேரவைக்கு வெளியே வைத்துக்கொள்ளும்படி கூறினார். மேலும், இருமல் சிரப் விவகாரத்தில் முதலில் கடிதம் போட்டது MLA அருள்தான் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Similar News

News October 17, 2025

கிரிக்கெட் வீரர்களின் மூட நம்பிக்கைகள்: PHOTOS

image

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் தங்கள் ஆட்டத்திறனை மேம்படுத்துவதற்காக சில நம்பிக்கைகளை பின்பற்றுவது வழக்கம். அவற்றில் பெரும்பாலும் மூட நம்பிக்கைகள் என்றாலும், தங்களின் மன திருப்திக்காக அதை விடாமல் அவர்கள் பிடித்து கொண்டிருப்பார்கள். பிரபல பேட்ஸ்மேன்களின் நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை இங்கே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கும் அப்படி ஏதாவது இருக்கா?

News October 17, 2025

Gujarat: புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்

image

குஜராத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 25 அமைச்சர்களுக்கும் கவர்னர் ஆச்சார்யா தேவ்ராத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். MLA ஹர்ஷ் சங்கவி DCM ஆக பதவியேற்றார். இந்த புதிய அமைச்சரவையில் 6 பேர் மட்டுமே அமைச்சர் பதவியை மீண்டும் அலங்கரித்துள்ளனர். ரிவாபா ஜடேஜா உள்பட 19 புதிய MLA-க்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். முன்னதாக, 16 அமைச்சர்களும் <<18023568>>கூண்டோடு<<>> ராஜினாமா செய்தனர்.

News October 17, 2025

கேஸ் சிலிண்டர் இருக்கா.. இந்த மோசடியில் மாட்டிக்காதீங்க!

image

அரசு உத்தரவின் பேரில், வீட்டிலுள்ள கேஸ் அமைப்பு & சிலிண்டர் ஏஜென்சி மூலம் பரிசோதிக்கப்படுகிறது. இதனை வைத்தும் மோசடி நடக்கிறது. இந்த பரிசோதனையை 5 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டும். அடிக்கடி பரிசோதனை என ஏஜென்சி தரப்பில் ஆள்கள் வந்தாலும், அது மோசடியே. மேலும், ஒருமுறை பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த ₹236 கட்டணம் அளித்தால் போதும். இது போன்ற மோசடியை 1906 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். SHARE IT.

error: Content is protected !!