News January 2, 2025

பாமக எம்எல்ஏ அருள் கைது

image

சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து, சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக எம்எல்ஏ அருள் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும், இதை ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற சௌமியாவை, போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 22, 2025

LGBTIQ என்றால் என்ன? Explained

image

ஆண், பெண் என்ற இரு பாலினத்தை தாண்டி சமூகத்தில் மூன்றாம் பாலினமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிலும் குறிப்பிட்ட சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதைதவிர, LGBTIQ என்ற பிரிவிலும் உலகளவில் மக்கள் உள்ளனர். இந்த LGBTIQ என்றால் என்ன, அவர்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றனர், அவர்களுக்கான பாலியல் விருப்பம் என்னவென்பதை மேலே swipe செய்து பாருங்கள்.

News October 22, 2025

2 மாவட்டங்களில் மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை

image

வேலூர், தருமபுரி மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவர்களை பிற்பகல் 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தொடர் மழை காரணமாக இன்று <<18068743>>17 மாவட்டங்களில்<<>> பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News October 22, 2025

காந்தாரா ஹீரோவின் உண்மையான பெயர் தெரியுமா?

image

நடிகர், நடிகைகள் பெயரை மாற்றுவது சகஜமான ஒரு விஷயம். அப்படி பெயரை மாற்றிக்கொண்டவர்களில் நடிகர் ரிஷப் ஷெட்டியும் ஒருவர். ‘காந்தாரா’ வெற்றி ரிஷப் ஷெட்டியின் பெயரை உலகெங்கிலும் கொண்டு சேர்த்தது. ஆனால், அவரது உண்மை பெயர் ரிஷப் ஷெட்டி அல்ல, பிரசாந்த் ஷெட்டி. ஆரம்ப நாட்களில் சினிமாவில் வெற்றி கிடைக்காததால், தனது தந்தையின் பரிந்துரைப்படி பெயரை மாற்றிக்கொண்டதாக ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!