News July 5, 2025
பாமக தலைமை நிர்வாகக் குழு கலைப்பு!

பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவைக் கலைத்து புதிய குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி, திலகபாமா, கே.பாலு, வெங்கடேஸ்வரன் தலைமையிலிருந்த தலைமைக் குழுவைக் கலைத்துவிட்டு, அன்புமணி, ஜி.கே.மணி, அருள், முரளி சங்கர், கரூர் பாஸ்கர், பரந்தாமன், தீரன், பு.தா.அருள்மொழி உள்ளிட்டோர் அடங்கிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு யார் தலைவர் என்பதில் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது.
Similar News
News July 5, 2025
சுட்டெரிக்கும் வெயில்.. கவனம் தேவை மக்களே!

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ள போதும், பிற மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. மதுரை, மீனம்பாக்கம், நாகை, திருச்சி, வேலூர், காரைக்கால் ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை (பாரன்ஹீட்) தாண்டியுள்ளது. இந்நிலையில், வரும் நாள்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும்போது கவனம் தேவை மக்களே!
News July 5, 2025
ஜூலை 15ல் ‘உங்களுடன் முதல்வர் திட்டம்’ தொடக்கம்

‘உங்களுடன் முதல்வர் திட்டம்’ ஜூலை 15-ம் தேதி அனைத்து நகர்புற, ஊரகப் பகுதிகளில் தொடங்கி வைக்கப்படுகிறது. இத்திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்கவும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News July 5, 2025
40 வயதில் கர்ப்பமான நடிகை… ஆச்சரியமூட்டும் உண்மை

தான் இரட்டை குழந்தைகளுக்கு தாயாக போவதாக மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் கன்னட நடிகை பாவனா ராமண்ணா. சிங்கிளாக இருந்த அவர் கர்ப்பமாகியுள்ளார் என்பதே இதில் சுவாரஸ்யம். 40 வயதில் தான் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை வந்தாலும், அது கடினமாக இருந்ததாகவும். IVF முறையில் கர்ப்பமானதாகவும் தெரிவித்துள்ளார். ‘என் குழந்தைக்கு தந்தை இல்லை. ஆனாலும் பெருமைப்படும் வகையில் வளர்ப்பேன்’ என்கிறார் பாவனா.